பிரபல இளம் நடிகை மாரடைப்பால் மரணம்! இரண்டு முறை கேன்சரில் மீண்டு வந்த பின்பு சோகம்
இரண்டு முறை கேன்சரில் இருந்து மீண்டு வந்த பிரபல இளம் நடிகை ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகை ஆண்ரிலா சர்மா
பெங்காலி நடிகை ஆண்ரிலா சர்மா(24). இவருக்கு கடந்த வாரத்தில் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டு ஹவராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
நவம்பர் 1ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கண்டறிந்த நிலையில், உடல் ஒரு பாகம் பக்கவாதம் ஏற்பட்டு செயலிழந்து கோமா நிலைக்கு சென்றுள்ளார்.
வென்டிலேட்டர் உதவியால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த இவருக்கு, நேற்று இரவு பலமுறை மாரடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இன்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நடிகை ஆண்ரிலா சர்மா வெறும் 24 வயதில் இரண்டு முறை புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த நிலையில், தற்போது இறுதியாக அடுத்தடுத்து மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.