தொங்கும் தொப்பையை அடியோடு குறைக்கணுமா? தண்ணீரில் இதை கலந்து குடிங்க
தற்போது ஆண் பெண் என அனைவருக்கும் ஒரு பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் தான்.
தவறான உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம் மற்றும் மோசமான வாழ்க்கை முறை போன்ற பல காரணங்கள் தொப்பை கொழுப்பை அதிகரிக்கக்கூடும்.
இதற்கு மக்கள் உடற்பயிற்ச்சி மற்றும் பல முயற்ச்சிகளை செய்கின்றனர். ஆனால் தற்போது இருக்கும் மக்களுக்கு உடற்பயிற்ச்சி செய்ய நேரம் கிடைப்பது அரிது.
இதற்காக நாம் வீட்டில் கிடைக்கும் பொருட்களை வைத்து சில வீட்டு வைத்தியங்களை காலை எழுந்தவுடன் செய்யலாம்.
இது போன்ற சில விடயங்களை செய்யும் போது அது நமது கெட்ட கொழுப்பு மற்றும் தொப்பையை இலகுவாக குறைக்கும். இது பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
தொப்பை குறைக்கும் எளிய முறை
ஆயுர்வேதத்தில் மஞ்சள் ஒரு முக்கியமான மருந்தாகக் கருதப்படுகிறது. இது உடலை உள்ளிருந்து நச்சு நீக்கி வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது. இதன் காரணமாக கொழுப்பு வேகமாக எரியத் தொடங்குகிறது.
இதனால் தான் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் மஞ்சள் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக்கொண்டால் அது எடை இழப்பிற்கு பெரிதும் உதவும்.
மஞ்சளில் குர்குமின் என்ற ஒரு தனிமம் உள்ளது. இது உடலில் உள்ள கொழுப்பு செல்களைக் குறைக்க உதவுகிறது. இதனால் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைக்க உதவுகிறது.
இந்த காரணத்தினால் தான் தினமும் மஞ்சள் நீரைக் குடித்தால் அது உங்கள் செரிமான அமைப்பை மேம்படுத்துவதன் மூலம் கொழுப்பை வேகமாக எரிக்க உதவுகிறது.
ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை டீஸ்பூன் மஞ்சளைக் கலந்து நன்கு கலக்கவும். விரும்பினால் அதில் ஒரு சிட்டிகை கருப்பு மிளகுத் தூளையும் சேர்க்கலாம்.
இப்போது இதை அப்படியே வெறு வயிற்றில் குடிக்க வேண்டும். இது தொப்பை குறைப்பது மட்டுமல்லாமல் அமிலத்தன்மை, வாயு, மலச்சிக்கல் மற்றும் வாய்வு போன்ற பிரச்சினைகளை நீக்குகிறது.
இது செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது. மேலும் மஞ்சளில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் சருமத்தை உள்ளிருந்து பளபளப்பாக்குகின்றன மற்றும் சுருக்கங்களைக் குறைக்கின்றன. இரத்த சுத்திகரிப்பிற்கும் பயன்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
