உங்களிடம் பழைய தங்க நகைகள் இருக்கா? அதை புதிதாக மாற்ற இதை செய்தால் போதும்
எல்லோரது வீட்டிலும் தங்கம் வைத்திருப்பது வழக்கம். தற்போது தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே செல்கிறது. இந்த கால கட்டத்தில் ஒரு அவசர தேவைக்கு நமது தங்க நகைகள் தேவைப்படும்.
சிலருக்கு தங்கத்தை சேர்த்து வைக்கும் பழக்கம் உள்ளது. தங்கம் வெளியில் மங்காததது போன்று இருந்தாலும் அழுக்கு படியும் வாய்பு உள்ளது. இதனால் நீங்கள் பல நாட்களின் பின்னர் பழைய தங்க நகைகளை அணியும் போது அவை புதிதாக எடுத்ததை விட பொலிவு குறைவாக காணப்படும்.
இப்படி பொலிவு குறைவாக காணப்படும் தங்க நகைகளை அவ்வப்போது சுத்தம் செய்தால் அது புதிது போல பளபளப்பாக மாறும். அதற்கான வழிமுறைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
புதிதாக தங்கத்தை மாற்றுதல்
நாளுக்கு நாள் அதிகமாகும் தங்கத்தின் மதிப்பை நாம் அப்படியே அனுபவிக்க வேண்டும். சிலர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைக்கும் தங்கத்தை அவ்வப்போது சுத்தம் செய்து புதிதாக வைத்துக்கொள்வது அவசியம்.
அப்போதுதான் அதன் தனித்துவம் மாறாமல் எத்தனை வருடங்கள் ஆனாலும் மாறாமல் அப்படியே இருக்கும். அணியாத நகைகள் மட்டுமன்றி தினசரி அணியும் நகைகளையும் புதிதாகவே வைத்துக்கொள்ள நாம் சில வழிமுறைகளை பின்பற்றினால் போதும்.
முதலில் நகைகளை முழுமையாக மூழ்க வைக்கக்கூடிய பாத்திரம் ஒன்றை எடுத்துக்கொள்ள வேண்டும். அதை சுடும் நீரை ஊற்றி நிரப்ப வேண்டும். பின்னர் அதில் வாஷிங் லிக்விட் அல்லது ஷாம்பூ ஒரு ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள்.
இதை அப்படியே 10 முதல் 15 நிமிடங்களுக்கு ஊற வையுங்கள். பின்னர் கரடுமுரடாக இல்லாமல் மென்மையான பிரெஷ் பயன்படுத்தி ஓரங்களில் எஞ்சியிருக்கும் அழுக்குகளை தேய்து எடுங்கள்.
அழுத்தம் கொடுக்காமல் லேசாக தேயுங்கள். பின்னர் நல்ல தண்ணீரை கொண்டு கழுவ வேண்டும். இப்படி செய்தால் பழைய தங்க நகைகள் நாம் புதிதாக வாங்கியதை போல மாறி விடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |