தாலியை ஏன் நெஞ்சுகுழியில் படும்படி அணிகிறோம்?இனி இந்த தவறை செய்யாதீங்க!
இயற்கையாகவே தங்கத்திற்கு வசீகர தன்மையும் உறுதித்தன்மையும் அதிகம். தங்கத்தை நம் உடலில் ஒவ்வொரு பகுதியிலும் வைக்கும் போது உடல் சில தன்மைகளை பெறுகிறது. தங்க நகைகளை அணிவதால் நமக்கு எத்தகைய பலன்கள் கிடைக்கும் என்பதை நமது முன்னோர்கள் தெளிவாக கணித்து வைத்திருக்கிறார்கள்.
பெண்கள் தங்கத்தில் தாலி அணிய வேண்டும் என நமது முன்னோர்கள் கூற வலுவான காரணம் இருக்கிறது. பெண்களுக்கு மார்பு குழியில் ஒரு நரம்பு முடிச்சு இருக்கிறது. இந்த நரம்பு முடிச்சு மூளையுடன் தொடர்பை ஏற்படுத்தும் வேலையச் செய்யும்.
இது பெண்களுக்கு இரண்டு நரம்புகள் கொண்ட பாதையாகவும் ஆண்களுக்கு ஒரு நரம்பு கொண்டவையாகவும் இருக்கும். இதனாலையே ஆண்களை விட பெண்களுக்கு அதிக ஞாபக சக்தி இருக்கிறது. ஆனால் ஞாபக சக்தி சற்றே ஆண்களுக்கு குறைவாக இருப்பினும் ஒரு முடிவை எடுக்கும் போது எந்தவித குழப்பமும் இல்லாமல் தீர்க்கமாக எடுப்பார்கள்.
ஆனால் பெண்கள் இந்த முடிச்சின் காரணமாக ஞாபகசக்தி அதிகமாக இருந்தாலும் ஒரு முடிவு எடுத்தபின் அதிக குழப்ப நிலையில் இருப்பார்கள் இதனைச் சமன் செய்யவே தங்கத்தில் தாலியை கட்டுகின்றனர்.
விவாகரத்து முடிந்த பின்னரும் கூட பெண்களால் சுலபமாக தாலியை கழற்ற முடிவதில்லை காரணம் கலாசார பின்னனி மட்டுமல்ல உளவியல் ரீதியாக நமது மனம் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்படுவதே ஆகும்.
தங்கம் அணிவதால் கிடைக்கும் பலன்கள்
ஒவ்வொரு உலோகமும் நமது உடம்பில் உரசும் போது ஒரு வித நற்பயனைத் தருகின்றன. தங்கமும் ஒரு உலோகமாகும் இந்த தங்கம் மார்பு குழியில் உரசும் போது பெண்களுக்கு ஏற்படும் இந்த குழப்பம் சமன் செய்யப்படும் காரணமாகவே தாலியை தங்கத்திலும் மார்பு குழியில் படும் வகையிலும் கட்டப்படுகிறது.
பொதுவாகவே தங்க நகை அணிந்தால் நம் மனதில் தெளிவும் உறுதியும் இருக்கும். இயற்கையாகவே தங்கத்துக்கு உறுதித் தன்மை அதிகம். அது நம் உடலோடு ஓட்டி கிடப்பதால் நமக்கு மன அழுத்தம் குறைவதுடன் மன உறுதியும் அதிகரிக்கிறது.
தங்கத்தை நம் உடலில் ஒவ்வொரு பகுதியிலும் வைக்கும் போது உடல் சில தன்மைகளை பெறுகிறது. காதில் தங்கம் இருந்தால் கழுத்து நரம்பு வலுவாக இருக்கும். மோதிர விரலில் தங்கம் இருந்தால் கருப்பையும், விந்துவும் வலுவடையும்.
காலில் தங்கம் இருந்தால் வாத நரம்புகள் தூண்டிவிடப்பட்டு உடலில் வீக்கமும் வலியும் ஏற்படுகிறது அதனால் தான் நம் முன்னோர்கள் வாதத்தை கட்டுப்படுத்தி சமமாக வைக்கும் வெள்ளியை காலில் அணிந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |