உங்க வீட்டுல ஊதுபத்தி ஏத்துவீங்களா? அப்போ இத அவசியம் தெரிஞ்சிக்கோங்க
ஹிந்து, கிறிஸ்துவம், இஸ்லாம் என எல்லா சமயத்தில் உள்ளவர்களும் வழக்கமாக செய்யும் விடயங்களில் ஒன்று தான் ஊதுபத்தி ஏற்றுதல்.
அவரவர்களின் சமயங்களின் படி ஊதுபத்தி கொளுத்தும் பழக்கம் பரம்பரை பரம்பரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
கடவுள் வழிபாட்டின் போது அனைத்து வீடுகளிலும் ஊதுபத்திகள் கொளுத்தி வைப்பது ஒரு பாரம்பரிய நடைமுறை என்பதால் வீட்டில் நறுமணம் நிறைந்திருக்கும்.
இந்த ஊதுபத்தி இயற்கை மூலிகைகள், பிசின்கள் மற்றும் நறுமணப் பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும். பாரம்பரிய இந்திய தூபம் ஆகும்.
அந்த வகையில், வீட்டில் ஊதுபத்தி ஏற்றுவதால் கிடைக்கும் முக்கிய பலன்கள் என்னென்ன என்பதனை பதிவில் பார்க்கலாம்.
ஊதுபத்தியால் கிடைக்கும் பலன்கள்
1. ஊதுபத்தி குச்சிகளில் இயற்கையாகவே நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இதனால் வீட்டிலுள்ள பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் மாசுபடுத்திகளில் இருந்து தப்பிக் கொள்ளலாம். குக்குளு சந்தனம் மற்றும் வேம்பு போன்ற மருத்துவ பொருட்கள் புகையை வெளியிடுவதால் கெட்ட நாற்றங்கள் நடுநிலையாக்கப்படுகிறது. புதிய உட்புற சூழல் ஊக்குவிக்கிறது.
2. ஊதுபத்தி குச்சிகளின் இனிமையான நறுமணம் மனதில் இருக்கும் அழுத்தங்களை குறைத்து அமைதிப்படுத்தும். பதட்டம் அதிகம் உள்ளவர்கள் கற்பூரம், குங்குமப்பூ மற்றும் துளசி போன்ற நறுமணங்கள் சுவாசிக்கலாம். தியானத்திற்கும் உதவியாக இருக்கும் என நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். நீண்ட நாட்களுக்கு பின்னர் ஊதுபத்தி ஏற்றும் பொழுது ஒரு நிம்மதி கிடைக்கிறது.
3. பொதுவாகவே ஊதுபத்தி குச்சிகளில் எலுமிச்சை, யூகலிப்டஸ் மற்றும் வேம்பு ஆகிய பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இந்த பொருட்கள் இயற்கையான பூச்சி விரட்டிகள் என்பதால் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் கொசுக்கள், ஈக்கள் மற்றும் பிற பூச்சிகள் அழிந்து போகின்றன.
4. இந்து மத மரபுகளின்படி, சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்தவும், நேர்மறை ஆற்றலை அழைக்கவும் பூஜை, ஹோமம் மற்றும் ஆன்மீக சடங்குகளில் ஊதுபத்தி கொளுத்த வேண்டும். இதிலிருந்து வரும் புகையானது எதிர்மறை ஆற்றல்களை தடுக்கிறது. அத்துடன் ஆன்மீக அதிர்வுகளை மேம்படும் என்றும் கூறப்படுகிறது.
5. சில ஆயுர்வேத ஊதுபத்தி கலவைகளில் மஞ்சள், கிராம்பு ஆகிய பொருட்களை சேர்க்கப்படுகின்றன. இது கொஞ்சம் எரியும் பொழுதே சுவாசக் கோளாறு உள்ளவர்களின் மூச்சை மேம்படுத்தும். ஆனால் காற்றை அதிகப்படியாக உள்ளிழுக்கப்படுவதை தவிர்க்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
