தலைமுடி பிரச்சினைக்கு செம்பருத்தி பூ செய்யும் அற்புதம்.. பெண்கள் கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி தன்னுடைய தலைமுடி அடர்த்தியாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள்.
ஆனால் தற்போது இருக்கும் வாழ்க்கை முறை மாற்றம், சூழல், இரசாயன ஷாம்போ பாவனை இவற்றால் அது பலவீனமடைகின்றது.
இது போன்ற பிரச்சினை இருப்பவர்கள் ஆங்கில மருத்துவத்திற்கு செல்ல முன் வீட்டிலுள்ள பொருட்களை கொண்டு கை வைத்தியம் செய்வதால் ஆரோக்கியமான முடிவை பெற முடியும்.
இதன்படி, செம்பருத்தி பூவை பயன்படுத்தி எண்ணெய் செய்து தடவுவதால் தலைமுடி பிரச்சினைகள் அனைத்தும் சரியாகின்றது என கூறப்படுகின்றது.
Image - Shutterstock
செம்பருத்தி மலர் வெப்பமண்டல பகுதிகளில் பொதுவாக காணப்படும் பூச்செடி. இதிலிருக்கும், இலை மற்றும் பூ உங்கள் கூந்தலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.
அந்த வகையில், செம்பருத்தியை தலைமுடி பிரச்சினைக்கு எப்படி பயன்படுத்துவது, அதன் நன்மைகள் தான் என்ன? என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
செம்பருத்தி எண்ணெய்
1. தேங்காய் எண்ணெய் + செம்பருத்தி பூ ஆகியவற்றை சேர்த்து காய்ச்சி தலைக்கு தடவினால் தலைமுடி உதிர்வு குறையும்.
2. செம்பருத்தி எண்ணெயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் ஏ மற்றும் சி மற்றும் ஆல்பா-ஹைட்ராக்ஸி அமிலங்கள் மற்றும் அமினோ அமிலங்கள் அதிகளவில் உள்ளன. இதனால் தலைமுடி பாதுகாக்கப்படுகின்றது.
3. செம்பருத்தி எண்ணெய் முடி வளர்ச்சியை மேம்படுத்துவதோடு, தலைமுடியை பளபளப்பாக்கவும் உதவியாக இருக்கின்றது.
4. மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிக்கிறது மற்றும் இரத்த ஓட்டம், புதிய முடி வளர்ச்சி மற்றும் சுழற்சியைத் தூண்டுதல் ஆகிய வேலைகளை செம்பருத்தி பார்க்கிறது.
5. இந்த எண்ணெயை குளிக்கும் முன்னர் தடவுவதால் பலவீனமான தலைமுடிகள் உதிர்ந்து புதிய தலைமுடி வளர்வதற்கு உதவியாக இருக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |