கடலை எண்ணெய்யில் இவ்வளவு நன்மைகளா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
ஏழைகளின் பாதாம் என அழைக்கப்படும் நிலக்கடலை உடல் ஆராக்கியத்திற்கு அளப்பரிய நன்மைகளை கொடுக்கின்றது. இவ்வாறான நன்மைகள் நிறைந்த நிலக்கடலைகளில் இருந்தே கடலை எண்ணெய் தயாரிக்கப்படுகின்றது.
கடலை எண்ணெய்யில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் குறித்தும் அதனை பயன்படுத்துவதனால் கிடைக்கப்பெரும் நன்மைகள் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.
கடலை எண்ணையில்...
ரெசவராடால்’ எனும் நோய் எதிர்ப்பு பொருள் கடலை எண்ணையில் காணப்படுகிறது. இது இதய வியாதிகள், புற்றுநோய்க்கு எதிராக செயலாற்றும் தன்மை கொண்டது.நோய்த் தொற்றுகளை தடுப்பதிலும் மற்றும் நரம்பு சம்பந்தமான வியாதிகள் ஏற்படாமல் காப்பதிலும் பங்கு வகிக்கிறது.
கடலை எண்ணெய்யில் மாங்கனீசு சத்து அதிகமாக காணப்படுகின்றது. இது நாம் உண்ணும் உணவில் உள்ள கால்சியம் சத்துகளை உடல் இலகுவாக உறிஞ்சிக்கொள்வதற்கு பயன்படுத்தப்படுகின்றது.
நிலக்கடலையில் உள்ள ரெஸ்வரெட்ரால் என்ற சத்து இதய வால்வுகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கு துணைப்புரிகின்றது.
கடலை எண்ணெயில் வைட்டமின்-ஈ அதிகமாக காணப்படுகின்றது. 100 கிராம் எண்ணெயில் 15.69 மில்லிகிராம் ஆல்பா டோகோபெரல், 15.91 மில்லிகிராம் காமா டோகோபெரல் உள்ளது. வைட்டமின் ஈ , லிப்பிடுகளில் கரையும் நோய் எதிர்ப்பு பொருளாகும்.
செல் சவ்வுகள் வளர்ச்சி அடையவும், ஆக்சிஜன்பிரீ-ரேடிக்கல்களிடம் இருந்து பாதுகாப்பு அளிப்பதிலும் இது பங்கெடுக்கிறது. நிலக்கடலையில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கரையும் கொழுப்பு, புரோட்டின், வைட்டமின், இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளன.
கடலை எண்ணெய்யில் உணவு சமைத்து உண்பதனால் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவடைகின்றது.
இதய வால்வுகளை பாதுகாப்பதிலும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் நோய்தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கின்றது. உடலை என்றும் இளமையாக பராமரிப்பதில் கடலை எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கின்றது.
மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிப்பதுடன் பெண்களுக்கு மார்பக கட்டி மற்றும் மார்பக புற்றுநோய் உண்டாவதை தடுக்கிறது.
மேலும் பெண்களுக்கு கர்ப்பப்பைக் கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படுவதையும் கடலை எண்ணெய் தடுக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |