இஞ்சி தோலுடன் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் அற்புத பலன்கள் என்னென்ன?
இஞ்சியை சமையலுக்கு பயன்படுத்துவோர் பெரும்பாலானோர் அதன் தோலை நீக்கி விட்டு பயன்படுத்துகின்றனர்.
ஆனால், தோலில் தான் அதிசய மூலிகை பலன்களே உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
அதிசய பயன்கள்
இஞ்சியின் தோலில் மட்டும், தோலில் இரண்டு மடங்கு அதிக பாலிஃபீனால்கள் இருப்பதால் அவை உங்களுக்கு ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்குமாம்.
மேலும், தேநீர் முதல் பல உணவுகளில் இஞ்சி பயன்படுத்தப்படுகிறது. இஞ்சியை சேர்ப்பதால் தேநீருக்கும், உணவுக்கும் சுவையை மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் பெரும் நன்மை பயக்கும்.

இஞ்சியை நன்றாக கழுவி பின்னர், தோலுடன் பயன்படுத்தும் பழக்கத்தை பின்பற்றவும். தேநீரில் இஞ்சியை தோலை நீக்காமல் சேர்க்கவும்.
இதனால், இஞ்சியின் முழு பயனை அடையலாம். மேலும், இவை மாதவிடாய் வலிக்கு நிவாரணம் அளிக்கிறது.
இதனுடன், கீல்வாத நோயாளிகளுக்கு உள்ள வீக்கத்தைக் குறைப்பதிலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.