உள ஆரோக்கியம் தரும் ஒலி குளியல் பற்றி தெரியுமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக குளியல் என்றதுமே நினைவில் வருவது நீர் தான். காரணம் தொன்றுதொட்டு நாம் தண்ணீரில் தான் குளிக்கின்றோம். அது குளிர்ந்த நீராகவோ அல்லது வெந்நீராகவோ இருக்கலாம்.
தற்காலத்தை பொருத்தவரையில் நீராவியிலும் குளியல் என பலரும் ஆரம்பித்துவிட்டார்கள் அதையும் தாண்டி உடலுக்கு புத்துணர்வு கொடுக்கும் ஒலி குளியல் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? இது எவ்வாறு செய்யப்படுகின்றது என்பது குறித்தும் இதன்நன்மைகள் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.
சவுண்டு பாத் நன்மைகள்
உடலையும், மனதையும் சமநிலைப்படுத்தி இலக்குகளை நோக்கி புத்துணர்வோடு செயற்படுவதற்கு யோகா, தியானம் போன்றவை பெரிதும் துணைப்புரிகின்றது.
அந்த பட்டியலில் தற்போது பலரையும் கவர்ந்து வருவது 'சவுண்டு பாத்' எனப்படும் 'ஒலி குளியல். மாறுபட்ட அதிர்வெண்கள் கொண்ட, இனிமையான ஒலி அலைகள் வழியாக உடலையும், மனதையும் அமைதிப்படுத்துவதே இந்த குளியலின் பிரதான காரணமான திகழ்கின்றது.
'குளியல்' என்று கூறினாலும் நாம் சாதாரணமாக அறிந்திருக்கும் குளியலின் எந்த முறையையும் இதில் பின்பற்றுவதில்லை. மனதினை உள்ளிருந்து குணப்படுத்தக்கூடிய, ஆழமான எதிரொலிக்கும் ஒலிகளில் தன்னை மறந்து மூழ்கி இருப்பதே 'ஒலி குளியல்' எனப்படுகின்றது.
நிதானமாக கண்களை மூடி, அறையில் வெளிப்படும் அந்த ஒலிகளைக் கேட்டு ரசிக்க வேண்டும். 45 முதல் 60 நிமிடங்கள் வரை இந்த குளியல் மேற்கொள்ளப்படுகின்றது.
ஒலி குளியலின்போது உருவாகும் ஒலி அதிர்வெண்கள், மூளையின் எண்ண அலைகளை சீர் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த குளியலினால் மன அழுத்தம் மற்றும் பதற்றம் குறைந்து உடலும், மனமும் புத்துணர்வு பெறும்.
அதிகமான வேலைப்பளு மற்றும் மன அழுத்தத்தால் ஏற்படும் தலைவலிக்கு இது சிறந்த தீர்வு தொடுக்கின்றது. நாள்பட்ட வலி, தூக்கம் தொடர்பான பிரச்சினை, மன அழுத்தம், பதற்றம், ஆழ்ந்த உணர்ச்சி மற்றும் உறவு தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒலி குளியல் சிறந்த தீர்வாகும்.
கர்ப்பிணிகள், இரண்டு வயதுக்கு உள்பட்ட குழந்தைகள், அறுவை சிகிச்சை மூலம் உடலுக்குள் உலோகம் மற்றும் பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டு இருப்பவர்கள், ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டவர்கள் ஒலி குளியலைத் தவிர்ப்பது நல்லது.
ஒலி குளியல், தியானம் செய்வதைப் போன்ற அனுபவத்தை தரக்கூடியது. இந்த சிகிச்சையின்போது யோகா விரிப்பை தரையில் விரித்து, அதில் கண்களை மூடியபடி படுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகின்றது.
அப்போது ஒலி எழுப்புவதில் நிபுணத்துவம் பெற்ற நபர் ஒருவர், பல்வேறு இசைக்கருவிகள் மற்றும் கிண்ணங்கள் மூலம் மாறுபட்ட அதிர்வெண்களில் ஒலி எழுப்புவார்.
இதனால் மன அழுத்தத்தினால் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைப்பதுடன் உடல் புத்துணர்வு பெறுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |