அரிசியை ஊற வச்சி சமைக்கிறீங்களா? இதை அவசியம் தெரிஞ்சுக்கோங்க
அரிசியை ஊற வைத்து சமைக்கும் வழக்கம் தற்போது அதிகரித்துள்ள நிலையில், இதனால் ஏற்படும் நன்மையினைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் மிகவும் வேகமாக மக்கள் செயல்பட்டு வருகின்றனர். நவீன உபகரணங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், சமைக்கும் அரிசியை ஒருமுறை கழுவிவிட்டு உடனே சமைக்கும் பழக்கம் ஆரம்பித்துவிட்டது.
ஆனால் முந்தைய காலங்களில் அரிசியை சமைப்பதற்கு முன்பாக கழுவி ஊற வைத்து சமைத்து வந்தனர். இந்த பாரம்பரிய முறைக்கு பின்னால் பல ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.

நன்மைகள் என்ன?
நம் முன்னோர்கள் அரிசியை ஊற வைத்து சமைப்பதால் சமையலத் நேரத்தினை குறைப்பதற்கு மட்டுமின்றி சத்துக்களை பெறுவதற்கும் இவ்வாறான வழக்கத்தினை செய்தனர்.
அரிசியின் வெளிப்புற அடுக்கில் காணப்படும் ஃபைடிக் அமிலம் என்ற பொருள் இரும்புச்சத்து, துத்தநாகம், கால்சியம் போன்ற தாதுக்களை முழுமையாக உறிஞ்சுவதை தடுக்கின்றது.
அரிசியை ஊற வைப்பதால் இந்த பொருளின் தாக்கம் குறைவதுடன், ஊட்டச்சத்துக்களும் எளிதில் உறிஞ்சப்படுகின்றது.

அரிசியை ஊற வைத்து சமைக்கும் போது அதிலுள்ள சில இயற்கை நொதி செயல்பாடுகள் தொடங்குவதுடன், இதிலுள்ள மாவுசத்து எளிதில் செரிமானம் ஆகும் வகையில் மாறுகின்றது. இதனால் வயிறு உப்புசம், வாயு தொல்லை, செரிமான கோளாறு இவைகள் குறையுமாம்.
நீரிழிவு நோயாளிகள் அரிசியை ஊற வைத்து சமைக்கும் போது, இதிலுள்ள மாவுசத்துக்குள் குறைவதால், ரத்தத்தின் சர்க்கரை அளவு வேகமாக அதிகரிப்பதை கட்டுப்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |