உடல் எடையை குறைக்கும் ஊற வைத்த முந்திரி - ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிட வேண்டும்?
முந்திரி என்றால் பலருக்கும் பிடிக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். முந்திரி பருப்பில் எண்ணற்ற பயன்கள் அடங்கியுள்ளது.
அப்படிப்பட்ட முந்திரியை ஊறவைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரிந்துகொள்வோம். முந்திரியில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது.
இது மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்கிறது. அடுத்ததாக முந்திரியை ஊறவைத்த பிறகு உட்கொள்ளும் போது, அதிலிருந்து பைடிக் அமிலம் வெளியேறி, அது எளிதில் ஜீரணமாகும். பைடிக் அமிலம் சில சமயங்களில் வயிற்றுப் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
ஒரே மாதத்தில் உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? இந்த ஒரே ஒரு பானம் போதும்
ஊற வைத்த முந்திரியின் பயன்கள்
சிலருக்கு ஒவ்வாமையும் ஏற்படும். இந்த நிலையில், உங்களைப் பாதுகாத்துக் கொள்ள, நீங்கள் ஊறவைத்த முந்திரியை சாப்பிடுவது நல்லது. முந்திரியில் பைடிக் அமிலம் உள்ளது.
இது உடலில் உள்ள தாதுக்களை உறிஞ்சுவதைத் தடுக்கிறது. முக்கியமாக ஊற வைத்த முந்திரியை சாப்பிடுவதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
தேவையற்ற உணவை சாப்பிடாமல் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும். ஊறவைத்த பீன்களில் கலோரிகள், புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது.
இவை, நார்ச்சத்து வளர்சிதை மாற்றத்தை சரிசெய்கிறது. மேலும் எடை இழப்புக்கும் இது உதவுகிறது. மேலும், ஊறவைத்த முந்திரியை உண்ணும்போது, கொலஸ்ட்ரால் அளவும் குறைகிறது.
முந்திரியில் உள்ள அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், பொட்டாசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.