மதிய நேரத்தில் குட்டி தூக்கம் அவசியமா? மருத்துவத்துடன் கூடிய விளக்கம்
பொதுவாக சிலர் வேலை செய்யும் இடமாக இருந்தாலும் சரி, வீட்டில் இருந்தாலும் சரி மதிய உணவுவை சாப்பிட்ட பிறகு சில நிமிடங்கள் சோர்வாக உணர்வார்கள்.
இதனால் அப்படியே இருந்த இடத்தில் குட்டி தூக்கமொன்று போடலாம் என ஆசைக் கொள்வார்கள்.
இது போன்ற நேரங்களில் அவரின் வேலையை சரியாக செய்ய முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படும். ஆனால் இது போன்று தூங்குவது உடலுக்கு நன்மையளிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதன்படி, மதிய உணவுக்குப் பிறகு குட்டி தூக்கம் போடுவது அறிவாற்றல் செயல்பாடுகளை மேம்படுத்த உதவியாக இருக்கின்றது. இது உடலுக்கு ஒரு வகை சக்தியையும் தருகின்றது.
அந்த வகையில் மதிய நேரம் தூக்கம் எவ்வளவு அவசியமானது என தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
மதிய தூக்கம் அவசியமா?
1. இரவு நேரத்தில் போதுமான அளவு தூங்கமில்லாமல் இருந்தால் உடல் சோர்வு, மனநிலையில் மாற்றம் உள்ளிட்ட பிரச்சினை ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது. இதனால் சிறிது நேரம் பகலில் தூங்குவது சிறந்தது. இது பகல் வேளையில் ஒரு வகையான உற்சாகத்தை ஏற்படுத்தும்.
2. சிலரின் கண்ணிற்கு கீழ் கருவளையம் காணப்படும். இது அவர்களின் அழகை பாதிக்கும். இது போன்ற நேரங்களில் இரசாயனம் கலந்த கீரிம்களை பயன்படுத்துவதை விட இரவில் 8 மணி நேரம் சரியாக தூங்கி எழும்பினால் கருவளையம் நாளடைவில் மறையும்.
3. குடும்பமாக இருக்கும் பொழுது மதிய வேளையில் ஒரு எரிச்சல், கடுகடுப்பு ஏற்படும். இதன்போது நன்றாக சாப்பிட்ட பின்னர் சிறிது நேரம் ஓய்வில் இருப்பது சிறந்தது. இது மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
4. நேப்பிங் எனப்படும் மதிய நேர குட்டி தூக்கம் நினைவாற்றல், கற்றல் திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் என ஆய்வுகள் கூறுகின்றன. ஏனெனின் தூங்குவதால் மூளை ஓய்வில் இருக்கும். இப்படி ஓய்விலிருந்து வேலை செய்யும் போது ஞாபக சக்தி அதிகரிக்கும்.
5. மதி நேரம் தூங்கும் போது இடது பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்குவது சிறந்தது. இப்படி படுப்பது உணவு செரிமானத்திற்கு உதவியாகவும் இருக்கும்.
எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?
- சாதாரண நபர்கள் 10 நிமிடங்கள் முதல் - 30 நிமிடங்கள் வரை தூங்குவது சிறந்தது.
- குழந்தைகள், வயதானவர்கள் - 90 நிமிடங்கள் வரை தூங்கலாம்.
உகந்த நேரம்
மதியம் 1 முதல் 3 மணிக்கு முன்னர் தூங்கி எழுவது சிறந்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |