Reverse walking முழங்கால் வலியை குணமாக்குமாம்.. தினமும் செய்யலாமா?
பொதுவாக நாம் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள நடைபயிற்சி அவசியமாக பார்க்கப்படுகின்றது.
நடைபயிற்சி எனக் கூறும் பொழுது பலர் முன்னோக்கி தான் நடப்பார்கள். ஆனால் முன்னோக்கி நடப்பதற்கு பதிலாக பின்னோக்கி நடந்தால் அதில் நன்மைகள் அதிகம் என ஆய்வுகள் கூறுகின்றன.
முழங்கால் வலி முதல் உடல் எடையை குறைப்பது வரையிலான பல பலன்கள் பின்னோக்கி நடப்பதால் இலகுவாக கிடைக்கின்றன. சிலர் என்ன செய்தாலும் எடை குறையாமல் இருக்கின்றது என கவலையில் இருப்பார்கள். இப்படியானவர்கள் பின்னோக்கி நடப்பது நல்லது.
அப்படியாயின் பின்னோக்கி நடப்பதன் மூலம் எமக்கு கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள் பற்றி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
பின்னோக்கி நடப்பதால் கிடைக்கும் பலன்கள்
1. முன்னோக்கி நடப்பதை விட பின்னோக்கி நடப்பதால் முழங்கால் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கிறது. ஒரு சில நோய் நிலைமைகள் காரணமாக முழங்கால்களில் வலி, வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதற்கு மருந்துகளால் நிவாரணம் பெறுவதை பார்க்க பயிற்சியால் நிரந்தரமான தீர்வை பெற்றுக் கொள்ளலாம். கீழ்வாதம் உள்ளவர்களும் பின்னோக்கி நடக்கலாம்.
2. முதுகு வலியால் அவதிப்படுபவர்கள் பின்னோக்கி நடக்கலாம். இப்படி சில நிமிடங்கள் தினமும் செய்து வந்தால் முதுகு வலிக்கு நிவாரணம் கிடைக்கும். பின்னோக்கி நடப்பதால் முதுகு தசைகளுக்கு பயிற்சி கிடைக்கும்.
3. பின்னோக்கி நடப்பதனால் கால்கள் வலு பெறுகின்றன. கால்களின் பின்புறத்தில் உள்ள தசைகளுக்கு தாக்கம் கொடுத்து வலுவாக்கப்படும். முன்னோக்கி நடப்பதை விட இந்த பயிற்சி சிறந்தது.
4. உடல் எடை அதிகரிப்பினால் அவஸ்தை அனுபவிப்பவர்கள் பின்னோக்கிய நடைபயிற்சியை செய்யலாம். இது உடலில் இருக்கும் கொழுப்பை கரைத்து உடலை கட்டுக்கோப்பாக மாற்றும். தினமும் 15 நிமிடங்கள் பயிற்சி செய்தால் போதுமானதாக இருக்கும்.
5. பின்னோக்கி நடக்கும் போது மனம் அதில் கவனம் செலுத்தும். இதன் விளைவாக மூளைக்கு செல்லும் நரம்புகளின் செயல்திறன் அதிகரிக்கும். தினமும் இந்த பயிற்சியை செய்து வந்தால் மனசோர்வு, பதட்டம் போன்ற பிரச்சினைகளால் வரும் அவஸ்தை குறையும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |