குப்பையில் தூக்கி எறியும் இந்த ஒரு பொருளுக்கு இவ்வளவு மவுசா? தலைமுடி முட்டி வரை வளர உதவும் அற்புதம்!
நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்கள் தேவையில்லை என குப்பையில் தூக்கி எறிந்துவிடுவோம்.
ஆனால், அதில் தான் எண்ணற்ற சத்துக்கள் மற்றும் மகிமைகளும் அடங்கி இருக்கும்.
அந்த வகையில், வெங்காயத் தோலை பயன்படுத்தி நாம் தலை முடி வளர்ச்சியை அதிகரிக்க முடியும்.
சிவப்பு நிறத்தில் உள்ள வெங்காயத்தோலை கொஞ்சம் எடுத்துக்கொண்டு, 1 டம்ளர் அளவு தண்ணீரை, 1 பாத்திரத்தில் ஊற்றி அதை அடுப்பில் வைத்து அதில் வெங்காயத் தோலை போட்டு நன்றாக கொதிக்க வையுங்கள்.
தினமும் காலை இதை செய்தாலே நரை முடியை தொல்லையை அடியோடு அழிக்க முடியுமாம்!
எப்படி பயன்படுத்த வேண்டும்?
பின்னர், 1/2 டம்ளர் அளவு தண்ணீர் வரும் வரை நன்றாக கொதித்து தண்ணீர் அப்படியே லேசான பிங்க் நிறத்துக்கு மாறியிருக்கும்.
இதை வடிகட்டி ஆற வைத்து இந்த தண்ணீரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துகொள்ளுங்கள் ஒரு வாரம் வரை கெட்டுப்போகாது.
இது சாதாரண வெங்காய தோல் தான் இதனால் எந்தவிதபாதிப்பு ஏற்படாது. தினமும் கூட இப்படி காய்ச்சி தலைக்கு அப்ளை செய்துகொள்ளலாம்.
பின்னர் 15 நிமிடம் தலையில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். அதன் பின்பு ஒரு ஐந்து நிமிடங்கள் தலைக்கு ஓய்வு கொடுத்து விடுங்கள்.
தொடர்ந்து, ஷாம்பூ அல்லது சீயக்காய் போட்டு தலைக்கு குளித்துவிடலாம். வாரத்தில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை இந்த குறிப்பை பின்பற்றி வாருங்கள்.
இப்படி பயன்படுத்தும்போது ஒரு மாதத்திற்குள் உங்கள் முடி வளர்ச்சி மாற்றமடைவதை கண்கூடா பார்ப்பீர்கள். ஒரு முறை இந்த டிப்ஸையும் முயற்சி செய்து பாருங்க...