இந்த ஆரோக்கிய பிரச்சினைகள் இருக்கா? தூங்கும் முன் தொப்புளில் ஆலிவ் எண்ணெய் தடவுங்க!
உடலில் மையப்புள்ளியாக கருதப்படும் தொப்புள், உடவில் பல்வேறு உறுப்புகளுடனும் நேரடியான தொடர்பை கொண்டுள்ளது.
ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்படுவதன் பிரகாரம் உடலில் தொப்புள் சக்கரம் சக்தி மற்றும் கற்பனையின் முக்கிய ஆதாரமாகும்.

உங்கள் படைப்பாற்றலை மேம்படுதவும், பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் தொப்புளில் எண்ணெய் தடவும் பழக்கமாகது தொன்று தொட்டு நடைமுறையில் உள்ளது.
அந்தவயைில், தினமும் இரவு படுக்கைக்கு செல்லும் முன் ஆலிவ் எண்ணெய்யை தொப்புளில் தடவும்போது, அது உங்கள் உடலை உள்ளிருந்து ஆரோக்கியமாக்கும்.

மேலும், செரிமானம் முதல் சரும ஆரோக்கியம் வரையில் ஆலிவ் எண்ணெய் உடலில் எண்ணற்ற அற்புதங்களைச் நிகழ்த்துகின்றது.
வழக்கமாக தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் பயன்படுத்தப்பட்டாலும், ஆலிவ் எண்ணெய் (Olive Oil) பயன்படுத்துவது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இளமையை தக்கவைப்பதிலும் அதிக ஆற்றல் காட்டுகின்றது.

அந்தவகையில், இரவில் படுக்கைக்கு செல்லும் முன்னர் தொப்புளில் ஆலிவ் எண்ணெய் தடவுவதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்திற்கு என்ன வகையான நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆரோக்கிய நன்மைகள்

செரிமான பிரச்சினை : அடிக்கடி வயிற்று வலி, வாயுத் தொல்லை அல்லது அஜீரணக் கோளாறால் அவதிப்பட்டு வருபவர்கள் தினசரி இரவில் தூங்கும் முன்னர், 2 சொட்டு ஆலிவ் எண்ணெய்யை தொப்புளில் விட்டு மென்மையாக மசாஜ் செய்து வந்தால் சில வாரங்களிலேயே நல்ல தீர்வு கிடைக்கும். ஆலிவ் எண்ணெய் குடல் இயக்கத்தைச் சீராக்குவதுடன் மலச்சிக்கலுக்கும் தீர்வு கொடுக்கின்றது.

இளமையான சருமம்: என்றும் இளமையாகவே இருக்க வேண்டும் என்ற ஆசை கொண்டவர்கள் ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி இரவில் தூங்கும் முன்னர் தொப்புளில் ஆலிவ் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது சிறந்த பலனை கொடுக்கும்.
ஆலிவ் எண்ணெய்யில் உள்ள வைட்டமின் E மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் சருமத்திற்குத் தேவையான ஊட்டச்சத்தை அளிக்கின்றன. எனவே வறண்ட சருமத்தால் அவதிப்படுவபவர்கள் இதைத் தொப்புளில் தடவும்போது, அது உள்ளிருந்து சருமத்தை ஈரப்பதமாக்கி இயற்கையான பொலிவைத் கொடுக்கின்றது. நீண்ட நாட்களுக்கு இளமையை தக்கவைத்துக்கொள்ள இது பெரிதும் துணைப்புரிகின்றது.

மூட்டு வலிக்கு தீர்வு: உடல் உழைப்பு காரணமாகவோ அல்லது வயது மூப்பு காரணமாகவோ ஏற்படும் மூட்டு வலிகளைக் குறைப்பதில் ஆலிவ் எண்ணெய் ஆற்றல் காட்டுகின்றது. மூட்டுவலியால் அவதிப்படுபவர்கள் தொப்புளில் ஆலிவ் எண்ணெய் தவி வந்தால், அதில் உள்ள ஆன்டிஇன்ஃபிளமேட்டரி பண்புகள் எலும்பு மற்றும் மூட்டுகளின் இயக்கத்தை சீராக்க உதவும்.

மன அமைதி மற்றும் சிறந்த தூக்கம்: தொப்புளில் ஆலிவ்எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வது நரம்பு மண்டலத்தைத் தளர்த்தி அமைதிப்படுத்துவதால் மனஅழுத்தம் குறைந்த சீரான மற்றும் ஆழ்ந்த தூக்கத்துக்கு துணைப்புரியும்.

மாதவிடாய் வலியை குறைக்கும்:மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் கடுமையான வயிற்று வலியைக் குறைப்பதில் ஆலிவ் எண்ணெய் சிறப்பாக செயல்டுகின்றது.தொப்புளில் இந்த எண்ணெய்யை தடவுவதன் மூலம் கருப்பைத் தசைகளைத் தளர்த்தி, மாதவிடாய் பிடிப்புகளில் இருந்து விரைவில் தீர்வு கொடுக்கின்றது. மேலும் இது கருவுரும் தன்மையையும் மேம்படுத்துகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |