30 வயது கடந்து விட்டதா? தினமும் வெண்டைக்காய் ஊற வைத்து தண்ணீர் குடிங்க- பலன் நிச்சயம்
மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் வயது அதிகரிப்பு என்பதனை யாராலும் தடுக்க முடியாது.
அதிலும் 30 வயது கடந்து விட்டது என்றால் மிக கவனமாக இருக்க வேண்டும்.
குறிப்பாக 30 வயதை எட்டிய ஆண்கள் உடல் ஆரோக்கியம் இந்த காலப்பகுதியில் மோசமடைய வாய்ப்பு இருக்கிறது.
இப்படியான நேரங்களில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக வெண்டைக்காயை தண்ணீர் ஊற வைத்து அந்த தண்ணீரை தினமும் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
அந்த வகையில், வெண்டைக்காயை தண்ணீரில் ஊற வைத்து குடித்தால் ஆண்களுக்கு வேறு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
வெண்டைக்காய் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்
1. தற்போது நாளுக்கு நாள் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஆண்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். இரத்த சர்க்கரை அளவை சரியாக பராமரிக்க வெண்டைக்காய் தண்ணீர் உதவியாக இருக்கிறது. தினமும் வெண்டைக்காய் தண்ணீர் குடித்து வந்தால் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம்.
2. 30 வயதை தாண்டிய ஆண்களுக்கு வயிற்று உப்புசம், மலச்சிக்கல் மற்றும் அஜீரண கோளாறு ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. இப்படியான நேரங்களில் வெண்டைக்காய் தண்ணீர் எமக்கு உதவியாக இருக்கும். இதிலிருக்கும் ஜெல் போன்ற அமைப்பு மலத்தை இலகுவாக வெளியேற்றும்.
3. வெண்டைக்காயில் வைட்டமின்கள், வைட்டமின் சி, ப்ளேவோனாய்டுகள் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருக்கின்றது. இது உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். ஏனெனின் 30 வயதை தாண்டியவர்களுக்கு நோய் தொற்றுக்களின் தாக்கம் விரைவாக ஏற்படும். இவர்களை நோயிலிருந்து பாதுகாக்க வெண்டைக்காய் தண்ணீர் உதவியாக இருக்கும்.
4. இதய நோயால் பெண்களை விட ஆண்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். வெண்டைக்காய் தண்ணீர் தினமும் குடிக்கும் ஒருவருக்கு உடலில் போதியளவு நார்ச்சத்து இருக்கும். இது கொலஸ்ரோல் தேக்கத்தை குறைக்கும்.
5. வெண்டைக்காய் தண்ணீர் குடிப்பவர்களுக்கு எலும்பு வலிமை பெறும். இதிலிருக்கும் கால்சியம், மக்னீசியம், வைட்டமின் கே உள்ளிட்ட சத்துக்கள் எலும்பு தொடர்பான பிரச்சினைகளை குறைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |