வெறும் வயிற்றில் தினமும் '4' வேப்பிலை எடுத்துக்கோங்க! நீரிழிவு நோயிலிருந்து தப்பிக்கலாம்
தினமும் 4 வேப்பிலை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயிலிருந்து எளிதாக தப்பிக்க உதவுவதைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நீரிழிவு நோய்
மோசமான வாழ்க்கை முறையினால் நீரிழிவு நோய் ஏற்படும். உடலில் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் நிலையில், இதனை கட்டுக்குள் வைப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஏனெனில், உடலில் ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், இதயம், மூளை, சிறுநீரகம், கல்லீரல், கண் போன்ற உடலில் இருக்கும் உறுப்புகள் பாதிக்கப்படும். எனவே அதை கட்டுக்குள் வைப்பது மிகவும் முக்கியம்.
சர்க்கரை நோயாளிகள் தங்களது உணவின் மூலம் ரத்த சர்க்கரை அளவை சுலபமாக கட்டுப்படுத்தலாம். தினமும் 4 வேப்பிலையை எடுத்துக் கொண்டால் நீரிழிவு பிரச்சனையிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
வேப்பிலை சர்க்கரை நோயை கட்டுப்படுத்துமா?
வைரஸ், பூஞ்சை, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட வேப்பிலை பழங்காலத்திலிருந்து பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றது.
மேலும் இவை ரத்த சர்க்கரை அளவை குறைப்பதற்கு பெரிதும் உதவுவதுடன், இதில் வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்களும் இருக்கின்றது. சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகவும் செயல்படுகின்றது.
இன்சுலின் வெளியீட்டை ஒழுங்குபடுத்துவதன் மூலமாக ரத்த சர்க்கரை அளவை சரியாக நிர்வகிக்க உதவுகின்றது. மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை செய்யும் கால்சியம் சத்தும் இதில் அதிகமாகவே இருக்கின்றது.
நீரிழிவு நோயாளிகளுக்கு ஃபிளாவனாய்டுகள் மிகவும் நன்மை பயப்பதுடன், இந்நோயின் அபாயத்தையும் குறைக்கின்றது. வேப்ப இலையில் ஃபிளாவனாய்டுகள் உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும்.
எவ்வாறு சாப்பிட வேண்டும்?
காலை வெறும் வயிற்றில் 4 அல்லது 5 வேப்பிலைகளை மென்று சாப்பிட்டு வந்தால் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். இவ்வாறு பச்சையாக சாப்பிட பிடிக்காதவர்கள் பொடியாக வைத்துக் கொண்டு தண்ணீரில் கலந்து குடிக்கவும்.
ஒரே நேரத்தில் அதிகளவு வேப்பிலைகளை சாப்பிடுவதை தவிர்த்து, சிறிய அளவில் மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஏதேனும் பிற பிரச்சனைகள் இருந்தால் வேப்பிலை சாப்பிடுவதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை கேட்கவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |