ஆண்கள் ஏன் முருங்கை கீரை சாப்பிடணும்?
பொதுவாக திருமணத்திற்கு பின்னர் மாப்பிள்ளை சுறுசுறுப்பாக இருப்பதற்கு முருங்கை கொடு என்பார்கள்.
இதற்கான முக்கிய காரணம் என இன்னும் சிலருக்கு சரியாக தெரியாது.
முருங்கை அதற்கு மாத்திரமல்ல நிறைய நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகின்றது.
அந்த வகையில் ஏன் முருங்கையை ஆண்கள் சாப்பிட வேண்டும்? முருங்கையில் என்னென்ன மருந்துவ குணங்கள் இருக்கின்றன? என்பதனை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
முருங்கையால் கிடைக்கும் நன்மைகள்
1. சுவாசம் தொடர்பான பிரச்சினையுள்ளவர்கள் அதாவது ஆஸ்துமா, மார்பு சளி, போன்ற பிரச்சினையுள்ளவர்கள் அடிக்கடி முருங்கை கீரை சூப் அருந்துவது நல்லது.
2. ஆண், பெண் இருபாலாரும் சில ஹார்மோன்கள் மாற்றம் காரணமாக மலட்டுதன்மையை அடைவார்கள். இதனை முருங்கை சிறந்த தீர்வளிக்கின்றது. ஏனெனின் முருங்கை சாப்பிடும் போது வழமையான இரத்தயோட்டத்தை விட அதிகமாக இருக்கும்.
3. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணிவதுடன், மலச்சிக்கல் நீங்கும்.
4. ஒருவருக்கு தொடர்ந்து கை, கால் வலி ஏற்படும் போது என்ன மருந்து பயன்படுத்துவது என தெரியாமல் குழம்பி போய் இருப்போம். இப்படியானவர்கள், முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு, மிளகு ரசம் வைத்து சாப்பிட வேண்டும்.
5. முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும்.
6. பொதுவாக ஒரு மனிதனுக்கு வரும் பிரச்சினைகள் உதாரணமாக பற்களின் உறுதி, நீளமான முடியின் வளர்ச்சி, நரை முடி, தோல் நோய், வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய நோய்களுக்கு முருங்கை நிரந்தர தீர்வளிக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |