தீர்க்க முடியாத ஐந்து வகை நோய்களுக்கு மருந்தாகும் மாசிக்காய்! இனி கவலை வேண்டாம்!!
Healthy Food Recipes
By DHUSHI
பொதுவாக உடம்பில் பிரச்சினைகள் ஏற்படும் பலரும் ஆங்கில மருத்துவத்தையே பெரிதும் விரும்புவார்கள்.
காரணம், இந்த மருத்துவம் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வை தரும் என்பதற்காக, ஆனால் உடனடியான தீர்வை தரும் என்பதுடன் மீண்டும் அதே பிரச்சினை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.
அந்தவகையில் பல நோய்களுக்கு மருந்தாகும் மாசிக்காய் பற்றிக் கேள்விபட்டிருப்போம். இந்த காய் பல் நோய்களுக்கு சிறந்த தீர்வை தருகிறது. இது பிரச்சினைகளுக்கு தீர்வாக சித்த மருத்துவ பல் பொடிகளிலும் இந்த காய் சேர்க்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து மாசிக்காயை வைத்து செய்யப்படும் மருத்துவம் குறித்து தொடர்ந்து கொள்வோம்.
மாசிக்காய் செய்யும் மருத்துவம்
- மாசிக்காயிலிருக்கும் முக்கிய குணங்களில் உள்ளுறுப்பு சூடு, குழந்தைகளுக்கு உண்டாகும் கணை, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சினைகளை நிரந்தரமாக இல்லாமலாக்கும் சக்தி இருக்கிறது. இதனால் ஆயுள்வேத மருத்துவத்தில் இது முக்கிய இடத்தை பிடிக்கிறது.
- உடம்பில் என்ன சாப்பிட்டாலும் சக்தி இல்லாத போல் இருக்கிறது என்றால், மாசிக்காயை லேசாக வறுத்து பொடியாக்கி ஒரு கிராம் அளவு எடுத்து தேனில் கலந்து தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் உடல் வலிமைப்பெறும் மற்றும் மலச்சிக்கல் பிரச்சினையும் குணமாகும்.
- பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் அதிகமான இரத்தப்போக்கு இருக்கும். இதனை சரிச் செய்வதற்கு, மாசிக்காய்ப்பொடியை ஒரு கிராம் அளவு எடுத்து நெய் சேர்த்து சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்யும் போது மேற்குறிப்பிட்ட பிரச்சினைகள் குணமாகும்.
- உரிய நேரத்திற்கு சாப்பிடாவிட்டால் குடலில் புண்கள் ஏற்பட்டு அது காலப்போக்கில் அல்ஷரை ஏற்படுத்தும். இதற்கு மாசிக்காய்ப்பொடி ஒரு கிராம் அளவு எடுத்து நாட்டுக்கோழி முட்டையின் மஞ்சள் கருவில் மசித்து கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் நீண்ட நாட்கள் குடற்புண் பிரச்சினைகள் குணமாகும்.
- சிறுவர்கள் முதல் பெரியவர்கள் பற்களில் பிரச்சினை இருக்கும். இந்த பிரச்சினை முற்றும் பட்சத்தில் பல்லை இழக்க வேண்டிய நிலைமையும் ஏற்படும். மேலும் பல் பிரச்சினையுள்ளவர்கள் மாசிக்காயை தூளாக்கி வெந்நீரில் கலந்து வாய் கொப்பளித்து வந்தால் காலப்போக்கில் பல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் முற்றாக குணமாகும். பல்லை இழக்க வேண்டிய நிலைமையும் ஏற்படாது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US