இது மட்டும் தெரிந்தால் இனி எலுமிச்சம் பழத்தோலை கண்டிப்பாக தூக்கிப்போட மாட்டீங்க!
பொதுவாக நாம் வேண்டாம் என்று தூக்கி போடும் சில பொருட்களில் பல்வேறு பயன்கள் நிறைந்து காணப்படுகின்றது.
அந்த வகையில் நாம் சாற்றை எடுத்த பின்னர் இனி வேண்டாம் என தூக்கி போடும் எலுமிச்சை தோலில் ஏகப்பட்ட பயன்கள் காணப்படுகின்றது.
மேலும் எலுமிச்சை சாற்றை விட அதன் தோலில் தான் அதிகபடியான வைட்டமின் சி சத்து காணப்படுகின்றது.
எலுமிச்சை தோலின் பயன்கள்
எலுமிச்சை தோல் பன்முகத்தன்மை கொண்டது. நிறைய தோல்கள் ஒரே சமயத்தில் சேர்ந்தால் அதை வைத்து நாம் ஊறுகாய் செய்து பயன்படுத்தலாம். இது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் துணைப்புரியும்.
ஒன்றிரண்டு தோல்கள் மட்டுமே என்றாலும் அதையும் வேறு வகையில் பயன்படுத்திக் கொள்ளலாம். எலுமிச்சையில் இயற்கையாகவே அமிலச்சத்து உண்டு மற்றும் நறுமனம் கொண்டது.
ஆகவே, வீடு, பாத்திரங்கள் போன்றவற்றை சுத்தம் செய்வதற்கு எலுமிச்சை தோலை பல்வேறு விதமாக பயன்படுத்தலாம்.
எலுமிச்சை சாறு, அதன் தோல் என அனைத்துமே இயற்கையான சுத்திகரிப்பான் போல வேலை செய்யக் கூடியவை. கிருமிகளை இது அற்புதமாக நீக்கும்.
இதில் உள்ள அமிலத் தன்மையானது கிரீஸ், அழுக்குப்பிடிப்பு போன்றவற்றை நீக்கும் மற்றும் கெட்ட வாடையை போக்க உதவும்.
எலுமிச்சை தோலை நாம் நேரடியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். சோப், பேக்கிங் சோடா போன்ற செயற்கையான பொருட்களைக் காட்டிலும் இயற்கையான எலுமிச்சை நல்லது.
காய்கறிகளை நறுக்குவதற்கு நாம் பயன்படுத்துகின்ற கட்டிங் போர்டுகளை சுத்தம் செய்ய எலுமிச்சை தோல்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.இது இயற்கையான கிருமி நாசினியாக செயல்படும்.
நம் வீட்டின் பாத்திரம் கழுவும் தொட்டி, முகம் கழுவும் தொட்டி போன்றவற்றில் எலுமிச்சை தோல் வைத்து தேய்த்து சுத்தம் செய்யலாம். இதன் மூலம் அது பளபளப்பாக காட்சி அளிக்கும்.
மைக்ரோவேவ் ஓவனில் கெட்ட வாடை இருக்கலாம் அல்லது அழுக்குகள் இருக்கலாம். ஒரு பவுலில் எலுமிச்சை தோல்களைப் போட்டு சூடேற்றினால் அது ஆவியாகி மைக்ரோவேவ் ஓவன் முழுவதும் பரவும்.அதற்குப் பிறகு இதை சுத்தம் செய்தால் புதிது போல் காட்சியளிக்கும்.
காப்பர் பாத்திரங்களில் தண்ணீர் அருந்துகின்ற பழக்கம் பெரும்பாலான வீடுகளில் உண்டு. சிலர் அதில் உணவை வைத்து பயன்படுத்துகின்றனர். அத்தகைய பாத்திரங்களை எலுமிச்சை தோல் வைத்து சுத்தம் செய்யலாம்.
பொதுவாக நாம் டீ, காஃபி தயார் செய்யும் பாத்திரங்களில் அதன் கறை படிந்து அழுக்காக காட்சி அளிக்கும். அத்தகைய பாத்திரங்களின் மீது எலுமிச்சை தோல் வைத்து சுத்தம் செய்தால் பளபளப்பாக மாறும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |