எலுமிச்சை- கிராம்பு இரண்டையும் தேநீரில் போட்டு குடிக்கலாமா? ஏகப்பட்ட பலன்கள்
பால் கலந்த தேநீரை அளவிற்கு அதிகமாக தினமும் குடிப்பவர்களுக்கு வயிறு சார்ந்த பிரச்சினைகள் வருவது அதிகமாக இருக்கும்.
ஆரோக்கியமாக வாழ நினைப்பவர்கள் முறையான உணவு பழக்கத்தை பின்பற்ற வேண்டும்.
வீட்டிலுள்ள கிராம்பு மற்றும் எலுமிச்சை கொண்ட மூலிகை தேநீர்களை அடிக்கடி பருக வேண்டும். இவை நமது உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி, நிரந்தர தீர்வு தருகிறது.
எலுமிச்சைப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் கிராம்பு பாக்டீரியா எதிர்ப்பு பண்பு கொண்டது. இவை இரண்டையும் கொண்டு தேநீர் தயாரித்து குடித்து வந்தால் ஏகப்பட்ட பலன்கள் கிடைக்கும்.
அந்த வகையில், எலுமிச்சை, கிராம்பு டீ குடிப்பதால் என்னென்ன பலன்கள் என தொடர்ந்து பதிவில் பார்க்கலாம். எலுமிச்சை+ கிராம்பு டீ
1. எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் உள்ளது, இது வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தும். அத்துடன் கிராம்பு எடை இழப்பிற்கு உதவியாக இருக்கும். இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக சேர்த்து குடித்து வந்தால் உடல் சோர்வு இல்லாமல் உற்சாகமாக இருக்கும்.
2. எலுமிச்சை மற்றும் கிராம்பு இரண்டும் செரிமானத்தை மேம்படுத்தும் பொருட்களாகும். தினமும் குடித்து வந்தால் பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் அதிகமாகும். அத்துடன் எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்து கொள்ளும்.
3. எலுமிச்சையில் வைட்டமின் சி மற்றும் கிராம்புகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இது நோய் கிருமிகளை எதிர்த்துப் போராட உதவியாக இருக்கின்றது. உடலை வலுப்படுத்தும் இந்த பொருட்களை அடிக்கடி டீயுடன் கலந்து குடிக்கலாம். சளி மற்றும் இருமல் போன்ற நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |