கல்லீரலை பாதுகாக்கும் இந்த சிறிய விதை - வாரம் இரு முறை சாப்பிடுங்க
சமையலின் சுவைக்காக பயன்படுத்தப்படும் கருஞ்சீரகத்திற்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. அனால் இது பலருக்கும் தெரியாது. இந்த விதை எகிப்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் பின்னர் இதன் மருத்துவ நன்மைகளுக்காக உலகில் பல இடங்களிலும் இது பயன்படுத்தப்பட்டது. இதில் வைட்டமின்கள், அமினோ அமிலங்கள், புரதங்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன.
இதனால் நீங்கள் அன்றாடம் சமைக்கும் உணவில் கருஞ்சீரகத்தை சேர்த்துக்கொண்டால் உடலுக்கு நல்ல நன்மை கிடைக்கும்.
கருஞ்சீரக மருத்துவ நன்மைகள்
அழற்சியை குறைக்க உதவும் - கருஞ்சீரகத்தில் தைமோகுவினோன் உள்ளது. இது உங்களுக்கு அழற்சி இருந்தால் அதற்கு நிவாரணம் கொடுக்க உதவும். அழற்சி இருப்பவர்கள் இதை தினமும் சாப்பிட்டு வந்தால் அது உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவும்.
கல்லீரலை பாதுகாக்க உதவும் - உடலில் இருக்கும் மிகவும் முக்கியமான உறுப்பு கல்லீரல். கல்லீரல் இல்லை என்றால் நமது உடலில் எந்த செய்றபாடும் சீராக நடக்காது.
இது நச்சுகளை அகற்றுவது, மருந்துகளை வளர்சிதை மாற்றம் செய்வது மற்றும் ஊட்டச்சத்துகளை செயலாக்குவது போன்ற பல்வேறு முக்கியமான தொழில்களை செய்வதை வழக்கமாக வைத்துள்ளது.
எனவே இந்த கல்லீரலை பாதுகாப்பது மிகவும் நன்மை தரும். அதற்கு இந்த கருஞ்சீரகம் மிகவுசம் உதவியாக இருக்கும்.
நீரிழிவு நோயை தடுக்கும் - இந்த சிறிய விதைகள் திடீரென இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பை தடுக்கின்றன. இதனால் நீரிழிவு நோய் முற்றுவது தடைபடும்.
கருஞ்சீரகத்தை தொடர்ந்து எடுத்துக்கொள்வது நம்முடைய உடல் கொழுப்பின் அளவையும் குறைக்க உதவும்.
நீங்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், ஒவ்வொரு காலையும் வெறும் வயிற்றில் கருஞ்சீரகம் கலந்த தண்ணீரைக் குடிக்கலாம்.
புற்றுநோயை தடுக்கும் - கருஞ்சீரகத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்கவும், புற்றுநோயை உண்டாக்கும் செல்களுக்கு எதிராக போராடவும் உதவும்.
இது கணைய, நுரையீரல், கருப்பை வாய், புரோஸ்டேட், தோல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இருக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |