நேர்மறையான ஆற்றலை வீட்டிற்குள் கொண்டு வரும் கற்றாழை.. எந்த இடத்தில் வைக்கணும் தெரியுமா?
வீட்டு ஓரங்களில் இருக்கும் கற்றாழைச் செடி ஒரு மருத்துவ தாவரம்.
இதனை கொண்டு நாள்ப்பட்ட நோய்களுக்கு மருந்து செய்யலாம். இவ்வளவு சிறப்புக்கள் கொண்ட கற்றாழையை தனியாக பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை.
மாறாக இந்த செடியை வீட்டுக்குள்ளும், வெளியிலும் வளர்ப்பதால் பல நன்மைகள் உள்ளன.
அந்த வகையில் வீட்டிற்குள் கற்றாழை செடி வளர்ப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
கற்றாழை வளர்ப்பதால் கிடைக்கும் பலன்கள்
1. கற்றாழையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இருக்கின்றன. இது சரும பராமரிப்பிற்கு உறுதுணையாக இருக்கின்றது. இதனால் சருமத்திற்கு தயாரிக்கும் அநேகமான பொருட்களில் மூலப்பொருளாக பயன்படுத்துகிறார்கள்.
2. காற்றை சுத்திகரிக்கும் பண்புகளை கற்றாழை கொண்டுள்ளது. இதனை வீட்டிற்குள் வளர்த்தால் உள்ளே இருக்கும் மாசுக்களை உறிஞ்சி வைத்து கொள்ளும். அத்தோடு சுவாசம் தொடர்பான நோய்கள் உள்ளவர்களையும் ஆபத்து இல்லாமல் பார்த்து கொள்கிறது.
3. பல்வேறுப்பட்ட நோய்களுக்கு மருந்தாகும் கற்றாழை ஜெல்லை சாப்பிடலாம். அல்லது பானங்களில் சேர்த்து குடிக்கலாம். இது உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கிறது.
4. கற்றாழை ஜெல்லை தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு பிரச்சினை தீரும். ஏனென்றால் கற்றாழையில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ ஊட்டசத்துக்கள் இருக்கின்றன.
5. மன அழுத்தத்தை போக்கும் குணம் கற்றாழைக்கு இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். வீட்டினுள் கற்றாழை வளர்ப்பது நல்லது. அத்துடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தவும் உதவியாக இருக்கின்றது.
6. கற்றாழை செடியை வீட்டினுள் வளர்ப்பதால் நேர்மறையான ஆற்றல் அதிகரிக்கின்றது. அத்துடன் ஆன்மிக ரீதியாக தூய்மையை கொடுப்பதாக நம்பப்படுகின்றது. எதிர்மறையான ஆற்றலைகளை விரட்டி வீட்டில் நிம்மதியையும், சந்தோசத்தையும் நிலைக்க வைக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |