நெல்லிக்காயில் இவ்வளவு நன்மையா? தினமும் சாப்பிட்டால் இந்த பிரச்சினை வரவே வராது
பொதுவாக விலையுயர்ந்த பழங்களை விடவும் மழிவாக கிடைக்கக்கூழய பழங்களின் அபூர்வ மருத்துவ குணங்கள் மற்றும் உடலுக்கு தேவையாக வைட்டமின்கள் செறிந்து காணப்படுகின்றது.
அப்படிப்பட்ட பழங்களுள் நெல்லிக்காய் மிக முக்கிய இடம் வகிக்கின்றது. நெல்லிக்கனியை சாப்பிட்டு நெடுநாள் நோயின்றி வாழ்ந்தவர் ஔவையார்.
இது பற்றிய வரலாற்று பதிவுகளும் உண்டு என்பது நம்மில் பலரும் அறிந்ததே. அந்த அளவுக்கு நெல்லிக்காயில் எண்ணிலடங்கா மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.
தினமும் 2 அல்லது 3 நெல்லிக்காய் சாப்பிடுவதை வழக்கமாக்கிக்கொண்டால் நாளொன்றுக்கு உடலுக்கு தேவையான வைட்டமின் -சி கிடைத்துவிடுகின்றது.
கூந்தல் கருமையாகும்
இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் சர்மத்தை இளமையாக வைப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது.
நெல்லிக்காயில் கால்சியம் சத்து நிறைய இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவைக்கும்.
கூந்தல் கருமையாகவும் அடர்த்தியாகவும் மினுமினுப்பாகவும் இருப்பதற்கு நெல்லிக்காய் மிகவும் உருதுணையாக இருக்கும்.
மேலும் செறிமான பிரச்சினைகளை சீர்செய்வதற்கும் இரத்தில் சக்கரையின் அளவை குறைப்பதற்கும் நெல்லிக்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.
கண்பார்வை கூர்மையாக இருப்பதற்கு தினமும் 1 நெல்லிக்காய் சாப்பிடடாலே போதும் வயதாகும் வரையில் கண்பார்வையில் எந்த பிரச்சினையும் வரவே வராது.
நெல்லிக்காய் வைரஸ் மூலம் பரவும் நோய்களையும் கட்டுப்படுத்தும். திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் வைட்டமின்- சி இருக்கிறது. ஆனால், வேறு எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு நெல்லிக்காயில் வைட்டமின்- சி மிக அதிகம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |