கடுகு எண்ணெயை உப்புடன் கலந்து வாய் கொப்பளித்தால் என்ன நன்மை?
கடுகு எண்ணெயை உப்புடன் கலந்து வாய் கொப்பளித்தால் அதனால் பல நன்மைகள் உண்டாகும் எனப்படுகின்றது.

கடுகு எண்ணையுடன் உப்பு
உப்பு கலந்த கடுகு எண்ணெயால் வாய் கொப்பளிப்பது பல நூற்றாண்டுகள் பழமையான ஒரு பழக்கமாகும். இது பற்களைச் சுத்தம் செய்வதற்கும் வாய் துர்நாற்றத்தைப் போக்குவதற்கும் பயனுள்ளதாக இருக்கும்.
உப்பின் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகளும், எண்ணெயின் சுத்தப்படுத்தும் பண்புகளும் வாயில் உள்ள அழுக்கு, பாக்டீரியா மற்றும் பற்காரையைக் குறைக்க உதவுகின்றன.
இதனால்தான் நல்ல வாய் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக இந்த பாரம்பரிய வைத்தியம் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பயன்படுத்தும் முறை
முதலில், ஒரு சிறிய கிண்ணத்தில் அரை தேக்கரண்டி உப்பு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சில துளிகள் கடுகு எண்ணெயைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
இப்போது, உங்கள் விரல் அல்லது பிரஷ்ஷைப் பயன்படுத்தி, அதை உங்கள் பற்களிலும் ஈறுகளிலும் மெதுவாகத் தடவவும். 1-2 நிமிடங்கள் மசாஜ் செய்த பிறகு, வெதுவெதுப்பான நீரில் வாயைக் கொப்பளிக்கவும்.

நன்மைகள்
- பற்களின் மஞ்சள் நிறத்தைக் குறைக்க உதவுகிறது: உப்பு மற்றும் கடுகு எண்ணெய், பற்களில் படிந்துள்ள அழுக்கு மற்றும் கறைகளை அகற்ற உதவுவதால், பற்கள் பளிச்சென்று இருக்கும்.
- வாய் துர்நாற்றத்திலிருந்து நிவாரணம் : உப்பு மற்றும் கடுகில் உள்ள பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள், வாயில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கையைக் குறைத்து, அதன் மூலம் வாய் துர்நாற்றத்தையும் குறைக்க உதவும்.
- ஈறுகளை வலுப்படுத்த உதவுகிறது: மென்மையான மசாஜ் ஈறுகளில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, அவற்றை வலுப்படுத்த உதவும்.
- பற்களைச் சுத்தம் செய்யும்: வாயைச் சுத்தம் செய்வதற்கும் வாய் சுகாதாரத்தைப் பேணுவதற்கும் உதவியாக இருக்கும்.

குறிப்பு
அதிகப்படியான உப்புப் பயன்பாடு உங்கள் பற்களின் எனாமலைச் சேதப்படுத்தும். வாரத்திற்கு 2-3 முறைக்கு மேல் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். உங்கள் ஈறுகளில் வீக்கம் இதை செய்ய முன்னர் உங்களுககு ஈறுகளில் பிரச்சனை இருந்தால் பல் மருத்துவரை அணுகுதல் அவசியம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |