தினமும் காகத்திற்கு உணவு வைக்கும் போது இந்த தவறை மட்டும் செய்யாதீங்க! என்ன நடக்கும் தெரியுமா?
பொதுவாக பண்டிகை தினங்களில் மற்றும் விரதங்கள அனுஷ்டிப்புக்கு பின்னர் சாப்பிட ஆரம்பிக்கும் போது காகத்திற்கு உணவு வைப்பது தமிழர்களின் பண்பாடு.
ஆனால் இது போன்ற நேரங்கள் தவிர்த்து காகத்திற்கு உணவு வைக்கும் போது சில விடங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
நமது வீடுகளிலிருக்கு முதியவர்கள் காகத்தை சனி பகவானுக்கும், எம தர்ம ராஜாவிற்கும் சமம் என ஓப்பிடுவார்கள்.
அந்த வகையில் காகத்திற்கு உணவு வைக்கும் முன் கவனத்திற்கு கொள்ள வேண்டியவை குறித்து தெளிவாக தெரிந்துக் கொள்வோம்.
காகத்திற்கு இந்த உணவை வைக்காதீர்கள்
காகங்களுக்கு பழைய உணவுகள், பழுதான உணவுகள் மற்றும் எச்சில் செய்த உணவகள் போன்ற உணவுகளைக் கொடுப்பது முற்றிலும் தவறான விடயம் இதனால் ஜென்ம தோஷங்கள் ஏற்படும், ஏனெனின் காகத்தின் வழியாக நாம் எம் வீடுகளில் இறந்த முதியவர்களையும், சனி பகவானுக்கும், எம தர்ம ராஜாவையும் பார்ப்பதாக ஐதீகம் இருக்கிறது.
தினமும் சமைத்து முடித்த பின்னர், முதலில் காகத்திற்கு வைத்து விட்டு உண்ண வேண்டும். இது எண்ணிலடங்காத ஜென்ம ஜென்மத்து பலனை அள்ளித்தருகிறது.
காகத்திற்கு உணவு வைக்கும் போது எதாவது வேண்டிக் கொண்டால் அது நிச்சயமாக நடக்கும். உதாரணமாக நிம்மதியின்மை, பணப்பிரச்சனை, சூனியம், அடிக்கடி நோய்வாய்ப்படல், வழக்கு விஷயங்கள், குழந்தையின்மை
காகத்திற்கு உணவு வைக்கும் போது தண்ணீரை் சேர்த்து வைப்பது மிக நல்லது மேலும் அமாவாசை தினங்களில் காகத்திற்கு தவிர்த்து மற்றைய தினங்களில் தயிர் சாதனம் வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் சனி தோஷங்கள் நீங்கும்.
புளித்த உணவுகள் மற்றும் புளித்த தயிர் போன்ற உணவுகள் வைக்கக்கூடாது இது தெய்வ குற்றமாக பார்க்கப்படுகிறது.
வீட்டில் அதிகம் கஷ்டம் உள்ளவர்கள் தினமும் காகத்திற்கு உணவு வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் வீட்டிலுள்ள கஷ்டம் நீங்கி செழிப்பு பெறுகிறது.