கரண்டியால் சாப்பிடாமல் கையால் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
பொதுவாக சாப்பிடும் சிலர் கரண்டிகளை பயன்படுத்தி சாப்பிடுவார்கள்.
ஆனால் இப்படி சாப்பிடுவதை விட கையால் சாப்பிடுவது ஆரோக்கியம் என தகவல் வெளியாகியுள்ளது.
சிலர் வெளியிடங்களுக்கு சென்றால் பிடிக்கிறதோ, இல்லையோ கரண்டியில் தான் சாப்பிடுவது நாகரிகம் என்றாகிறார்கள்.
மாறாக கைகளால் சாப்பிடும் போது உடலில் உள்ள பல செயற்பாடுகளில் மாற்றம் ஏற்படுவதாக கூறப்படுகின்றது.
அந்த வகையில் கைகளை பயன்படுத்தி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
கைகளால் சாப்பிட்டால் என்ன பலன்?
1. உணவைத் தொட்டவுடன் அது என்ன நிலையில் இருக்கின்றது என்பதனை கைகளால் சாப்பிட்டால் மாத்திரமே உணர முடியும். இந்த தகவலை கைகள் எடுத்து மூளைக்கு கொடுக்கிறது.
2. கைளால் சாப்பிடும் பொழுது சாப்பிட போகிறோம் என்ற தகவலை மூளை வயிற்றுக்கு அனுப்புகிறது. இதனால் உங்கள் வயிற்றில் உள்ள செரிமான அமிலங்கள் சுரக்கின்றது. இது வாயிலும் சில மாற்றங்களை ஏற்படுத்தும்.
3. நமது கையில் இருக்கும் பாக்டீரியாக்கள் வாய், தொண்டை மற்றும் குடல் வரை சென்று செரிமானத்தை இலகுவாக்குகின்றது.
4. கையைக் கழுவிவிட்டு சாப்பிடும் போது பாக்டீரியாக்கள் வாயிற்குள் செல்வது தடுக்கப்படுகின்றது. இதனை தவிர்ப்பதற்காகவே சிலர் கரண்டியால் சாப்பிடுகிறார்கள். ஆனால் அதில் பெரியளவு பலன்கள் இல்லை.
5. கரண்டியால் சாப்பிடும் போது உணவின் தன்மை புரியாமல் சாப்பிடுவோம்.
6. செரிமானத்திற்கு நீண்ட நேரம் எடுக்கும்.
7. சீரற்ற மனநிலை, மன அழுத்தம் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் உணவின் தன்மை அறியாமல் வேகமாக சாப்பிடுவார்கள். கரண்டியால் சாப்பிடும் போது அளவு தெரியாமல் அதிகமான உணவு உடலுக்குள் செல்ல வாய்ப்பு இருக்கிறது. அதே சமயம், கையால் சாப்பிடும்போது அவ்வளவு வேகமாக சாப்பிட முடியாது பாதிப்பும் குறையும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |