பெண்களின் கருப்பையை பலப்படுத்தும் உளுந்தங்கஞ்சி
பொதுவாக வீடுகளில் அம்மாக்கள் பெண் பிள்ளைகளுக்கு அதிகமான உளுந்தம் கஞ்சி வைத்து கொடுப்பார்கள்.
இந்த செயற்பாட்டிற்கு பின்னர் ஒரு மருத்துவம் இருக்கின்றது என உங்களுக்கு தெரியுமா?
பெண்களின் உடம்பு இயற்கையாகவே அதிகமான வெப்பத்தை கொண்டிருக்கும். இதனை தணிப்பதற்காகவும், குழந்தை பெறுபேற்றை ஊக்கப்படுத்தவும், கருப்பை பிரச்சினையை குறைக்கவும் கொடுக்கப்படுகின்றது.
உளுந்தம் கஞ்சியில், இரும்புச்சத்து, புரதச்சத்து, ஜிங்க், நார்ச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் உள்ளிட்ட ஏராளமான ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கின்றன.
இந்த பதிவை முழுமையாக படித்த பின்னர் உளுந்தம் கஞ்சியின் நன்மைகளையும் அதனை எப்படி ஆரோக்கியமாக சமைப்பது என்பதையும் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
- உளுந்தம்பருப்பு - 1 கப்
- வெந்தயம் - 1 ஸ்பூன்
- ஏலக்காய்ப்பொடி - 1 டீஸ்பூன்
- சுக்கு பொடி - கால் ஸ்பூன்
- தேங்காய்ப் பால் - 1 கப்
- துருவிய வெல்லம் -1 கப்
- அரிசி - 2 ஸ்பூன்
- நல்லெண்ணெய் - 1ஸ்பூன்
- தேங்காய்த்துருவல் - அரை மூடி
செய்முறை
வெந்தயம், உளுந்து ஆகியவற்றை கொடுக்கப்பட்ட அளவில் எடுத்து சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.
பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். இதனை ஒரு புறமாக வைத்து விட்டு, ஒரு கடாயை அடுப்பில் வைத்து வெந்தயப் பொடி,தேங்காய்ப்பால், ஏலத்தூள், வெல்லம், சுக்குப்பொடி அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கிளறவும்.
கஞ்சி கொதித்து கொண்டிருக்கும் பொழுது 2 ஸ்பூன் அரிசியை சேர்த்து 20 - 15 நிமிடங்களில் வரை வைத்திருக்கவும். பின், தேங்காய்த்துருவலை நல்லெண்ணெய் சேர்த்து தாளித்து கஞ்சியில் சேர்க்கவும்.
கொடுக்கப்பட்ட ரெசிபியை சரியாக பின்பற்றினால் சுவையான உளுந்தம் கஞ்சி தயார்!
உளுந்தம் கஞ்சி கொடுப்பதால் என்ன பலன்
1. கருப்பை உறுதிக்கு உதவியாக இருக்கும்.
2. உடல் சூட்டை குறைக்கும்.
3. கால்களில் மூட்டுப் பிரச்சனை தீரும்.
4. நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலைப்பார்ப்பவர்களுக்கு இருக்கும் இடுப்பு வலி, முதுகு வலி பிரச்சினைக்கு நிவாரணம் கொடுக்கும்.
5. மாதவிடாய் பிரச்சினை தீரவும் வாய்ப்பு இருக்கின்றது.
6. வெள்ளைப்படுதல் பிரச்சினை குறையும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |