தினமும் ஒரு கைப்பிடி முளைத்த வேர்க்கடலை சாப்பிடுங்க! அதிசயத்தை கண்கூடாக பார்ப்பீங்க
முளைத்த வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
முளைத்த வேர்க்கடலை
உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்க, நீங்கள் கடினமாக உழைக்கவோ அல்லது அதிக சிரமத்தை எதிர்கொள்ளவோ தேவையில்லை.
காலையில் ஒரு கைப்பிடி முளைத்த வேர்க்கடலையை சாப்பிட்டால் போதும். இது உடலின் கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளுக்கும் நன்மை பயக்கும்.
'வயிறு சுத்தமாக இருந்தால், அனைத்து நோய்களும் போய்விடும்' என்று கூறப்படுகிறது. ஆனால் மோசமான வாழ்க்கை முறையும் ஆரோக்கியமற்ற உணவுகள் மேலும் மேலும் நோய்களை அதிகரிக்கவே செய்கின்றது.
இத்தகைய சூழ்நிலையில், நார்ச்சத்து நிறைந்த முளைத்த வேர்க்கடலையை உட்கொள்வது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
நன்மைகள் என்ன?
மலச்சிக்கல், அஜீரணம் மற்றும் வாயு போன்ற பிரச்சனையிலிருந்து தீர்வு அளிப்பதாக ஆயுர்வேதத்தில் கூறப்படுகின்றது.
முளைத்த வேர்க்கடலையானது, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் இருப்பதால் ரத்த ஓட்டத்தை சீராக வைப்பதுடன், கொழுப்பின் அளவையும் குறைக்கின்றது.
நீரிழிவு நோயாளிகளுக்கு முளைத்த வேர்க்கடலையானது அதிக நன்மையை கொடுக்கின்றது. ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதுடன், நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும் உதவும்.
தினமும் முளைகட்டிய வேர்க்கடலையை சாப்பிடுவதால் எலும்புகள் வலிமையாவதுடன், கால்சியம் சத்து அதிகம் கிடைப்பதால் மூட்டு வலி, பலவீனத்தை நீக்கவும் செய்கின்றது.
எடையைக் குறைக்கவும், முடி தொடர்பான பிரச்சனையைக் குறைக்கவும் உதவுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |