சுவையான வாழைக்காய் வறுவல்... வெறும் 10 நிமிடத்தில் செய்வது எப்படி?
இந்தியர்கள் பெரும்பாலானவர்கள் சமையலில் பயன்படுத்தும் காய்கறில் ஒன்று தான் வாழைக்காய்.. அனைத்து சீசன்களிலும் கிடைக்கும் காய் மட்டுமின்றி இதன் விலையும் மிகவும் குறைவே...
இந்த பதிவில் வாழைக்காய் வறுவல் மற்றும் அதன் பயன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
வாழைக்காயின் நன்மைகள்
வாழைக்காயில் அதிகமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் இதய ஆரோக்கியம், எடை இழப்பு, சர்க்கரை நோய், மலச்சிக்கல் இவற்றினை தடுக்கின்றது.
வாழைக்காயை பலரும் சிப்ஸ் போன்றே சாப்பிடுவதற்கு விரும்புகின்றனர். ஆம் கேரளா போன்ற இந்திய மாநிலங்களில் தேங்காய் எண்ணெய்களில் பொறித்து தருவார்கள். சுவை வேற லெவல் என்று தான் கூற வேண்டும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு ஹார்மோன் சமநிலையாக வைத்திருக்க செய்வதுடன், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதனை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.
மாரடைப்பு, பக்கவாதம், இதய சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை தடுக்க வாழைக்காயானது உதவுகிறது. அதுமட்டுமின்றி இதில் நிறைந்துள்ள நார்ச்சத்து மற்றும் மாவுச்சத்து குடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது.
பொட்டாசியம் சத்துக்களின் களஞ்சியமாக வாழைக்காய் விளங்குவதனால் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. அதுமட்டுமின்றி வாழைக்காயில் உள்ள வைட்டமின் B6 உடலின் செல்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.
வாழைக்காயின் பிணைக்கப்பட்ட பினாலிக் கலவைகளின் அதிக சதவீதத்தில் உள்ளதால், வயிறு மற்றும் சிறுகுடல் செரிமானத்தைத் தக்க வைத்துக்கொள்ள உதவுகிறது.
வாழைக்காய் வறுவல் ரெசிபி:
தேவையான பொருட்கள்:
- வாழைக்காய் - 2
- எண்ணெய் - 2 கரண்டி
- மஞ்சள் தூள் - 1/4 கரண்டி
- மிளகாய் தூள் - 1 1/2 கரண்டி
- மிளகு தூள் - 1/4 கரண்டி
- உப்பு தேவையான அளவு
- கடுகு - சிறிதளவு
- உளுத்தம் பருப்பு - 1/2 கரண்டி
- கரம்மசாலா - அரை ஸ்பூன்
- மிளகு தூள் - அரை ஸ்பூன்
- கருவேப்பிலை சிறிதளவு
செய்முறை
வாழைக்காய் தோலை நீக்கி அதனை வட்ட வடிவில் துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
பின்பு கொதிக்கும் நீரில் வாழைக்காய் துண்டுகளை போட்டு 2-3 நிமிடங்களுக்குப் பிறகு, தண்ணீரை முழுவதுமாக வடிகட்டி ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து பின்பு அதனுடன் வாழைக்காயை சேர்த்துக் கொள்ளவும்.
ஒரு நிமிடம் வாழைக்காயை வதக்கியவுடன், அதில் மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய்த்தூள், உப்பு மற்றும் மிளகு சேர்த்து நன்றாக கிளறவும்.
மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கிய பின்பு அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்... இப்போது சுவையான வாழைக்காய் வறுவல் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |