மதிய சாப்பாட்டுக்கு பின் நெய் சாப்பிடலாமா? மலச்சிக்கல் பிரச்சினை இருப்பவர்கள் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக பலருக்கும் காலநிலை மாற்றம் காரணமாக பசியெடுப்பதில் மாற்றங்கள் ஏற்படக் கூடும்.
இதன்படி, குளிர்காலத்தில் சிலர் அதிகமாக சாப்பிடுவார்கள். இவ்வாறு அளவிற்கு அதிகமாக சாப்பிடும் பொழுது சாப்பிட்ட களைப்பு மற்றும் சோர்வு நமக்கு ஏற்படலாம் மற்றும் வயிறு மந்தமாகவும் காணப்படும்.
மேலும் அதிகமாக சாப்பிடும் பொழுது தொப்பை, எடை அதிகரிப்பு ஆகிய பிரச்சினை வரக்கூடும்.
இது போன்ற பழக்கம் இருப்பவர்கள் பசியை கட்டுக்குள் வைப்பதற்காக சில ஆரோக்கியமான முயற்சிகளை எடுக்கலாம்.
இல்லாவிட்டால் சாப்பிட்ட பின்னர் ஒரு மேசைக்கரண்டி நெய்யுடன் சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம்.
இவ்வாறு செய்தால் உடலில் ஏகப்பட்ட ஆரோக்கியமான நன்மைகள் ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றார்கள். அவை தொடர்பாக தெளிவாக பார்க்கலாம்.
நெய் சாப்பிடலாமா?
1. அரை டீ ஸ்பூன் நெய்யுடன், கொஞ்சம் சர்க்கரை சேர்த்து சாப்பிடும் பொழுது செரிமான நொதிகளை தூண்டி செரிமானத்தை சீர்ப்படுத்தும். இதனால் வயிற்றில் அடைப்பு போன்ற உணர்வு இருக்காது.
2. தினமும் சாப்பிட்ட பின்னர் நெய் மற்றும் வெல்லம் எடுத்துக் கொள்வதால் மலச்சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும். அத்துடன் இதர குடல் சார்ந்த பிரச்சினைகளை தவிர்க்கலாம். நெயில் இருக்கும் பிசுபிசுப்பு தன்மையை மலத்தை இலகுவாக வெளியேற்றும்.
3. வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை சீராக வைத்திருக்கும் சக்தி நெயிற்கும் சர்க்கரைக்கும் உள்ளது. மற்றும் குடலில் உள்ள புண்களை குணப்படுத்துவதற்கும் நெய் உதவியாக இருக்கின்றது.
4. காரம் சாப்பிட்ட பின்னர் வயிற்றில் காரத்தை ஆசுவாசப்படுத்தக் கூடியது சக்தி நெயிற்கு உள்ளது. மேலும் நெய் குளிர்ச்சி பொருந்தியது என்பதால் உடலில் உள்ள சூட்டையும் தணிக்கும்.
5. நெய்யில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் கொழுப்பு-கரைதல் விட்டமின்களான ஏ, இ மற்றும் டி ஆகிய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. இது உணவுடன் கலந்து ஏகப்பட்ட சத்துக்களை உடலுக்கு கொடுக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |