நெய்யில் வறுத்த பூண்டை தினமும் சாப்பிடுங்க - என்னென்ன நன்மைகள் தெரியுமா?
பூண்டில் அதிக மருத்துவ குணங்கள் நிறைய உள்ளது. இதை நெய்யில் வறுத்து சாப்பிட்டால் உடலுக்கு பல நனடமைகள் கிடைக்கும்.

நெய்யில் வறுத்த பூண்டு
பூண்டு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் மற்றும் உடல் எடையைக் குறைத்தல் போன்ற பல மருத்துவ நன்மைகளைக் கொண்டுள்ளது.
இதில் உள்ள அல்லிசின் (Allicin) சத்து கொலஸ்ட்ராலைக் குறைத்து, பாக்டீரியா தொற்றுக்களை எதிர்த்துப் போராடி, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.
இவ்வளவு நன்மை தரும் பூண்டை நெய்யில் வறுத்து சாப்பிட்டால் உடலுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும்.

நன்மைகள்
பூண்டில் அல்லிசின் என்ற சேர்மம் உள்ளது, இது நெய்யுடன் வறுக்கும்போது இன்னும் அதிக செயல்திறனை கொண்டு வரும்.
இது உடலில் உள்ள பாக்டீரியா மற்றும் வைரஸ்களை எதிர்த்துப் போராட உதவுவதோடு, சளி மற்றும் நோய்த்தொற்றுகளைத் தவிர்க்கவும் உதவுகிறது.
வாயுத்தொல்லை, நெஞ்செரிச்சல் அல்லது மலச்சிக்கலால் நீங்கள் அவதிப்பட்டால், வறுத்த பூண்டு ஒரு நிவாரணியாக செயல்படும்.

நெய் வயிற்றுப் பாதையை எளிதாக மாற்றும். அதே நேரத்தில் பூண்டு செரிமான நொதிகளைத் தூண்டி, உணவை எளிதாக ஜீரணிக்க உதவுகிறது. பூண்டில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உள்ளன.
அதை நெய்யுடன் சேர்த்து உட்கொள்வது மூட்டு வலி மற்றும் கீல்வாதத்திலிருந்து நிவாரணம் அளிக்கும். மேலும், இது உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்கவும் உதவுகிறது.

நெய் மற்றும் பூண்டு கலவையானது உடல் பலவீனத்தைப் போக்கவும், உடல் வலிமையை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும், இது ஹார்மோன் சமநிலையையும் மேம்படுத்துகிறது.
நெய்யில் வறுத்த பூண்டு, கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், இது இரத்த நாளங்களில் உள்ள அசுத்தங்களை நீக்கி, இயல்பான இரத்த அழுத்தத்தைப் பராமரித்து, இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.