Cashew nuts: கைபிடி அளவு முந்திரி சாப்பிட்டால் புற்றுநோய் வராதாம்.. யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
பெரும்பாலானோர் நட்ஸ் விரும்பி சாப்பிடும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
வீட்டில் சமையலுக்காக வாங்கி வைத்திருக்கும் முந்திரிகளை கூட எடுத்து சாப்பிடும் அளவுக்கு முந்திரி என்றால் அனைவருக்கும் பிடிக்கும்.
கேசரி, பாயாசம் போன்றவற்றில் சேர்க்கப்படும் முந்திரி வெறுமனே சுவையானது மட்டுமின்றி, ஏராளமான சத்துக்களையும் கொண்டுள்ளது.
அதிலும் குறிப்பாக முந்திரியில் ஆரோக்கியமான கொழுப்புக்களான மோனோஅன்சாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளன. அதே சமயம், புரோட்டீனும் அதிகம் உள்ளன. இது தவிர முந்திரியில் மக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், ஜிங்க், வைட்டமின் பி6, வைட்டமின் கே போன்றவையும் நிறைந்துள்ளன.
இவ்வளவு சத்துக்கள் நிறைந்த முந்திரி உடலுக்கு ஏராளமான நன்மைகளை வழங்குகின்றது.
அந்த வகையில் தினமும் ஒரு கைபிடி அளவு முந்திரி சாப்பிட்டு வந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
புற்றுநோய் வராதாம்..
1. அடிக்கடி முந்திரி சாப்பிடுவதால் எலும்புகள் தொடர்பான பிரச்சினைகள் சரியாகும். ஏனெனின் முந்திரியில் கால்சிம், மக்னீசியம், வைட்டமின் கே போன்றவை உள்ளன. பலவீனமடைந்திரக்கும் எலும்புகளை சரிச் செய்யும் ஊட்டசத்துக்கள் முந்திரியில் இருப்பதால் தான் இந்திய உணவுகளில் முந்திரி சேர்க்கிறார்கள்.
2. புற்றுநோயை தடுக்கும் உணவுகளில் முந்திரியும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. குடல் புற்றுநோயை ஏற்படுத்தும் பாக்டீரியாவை வளரவிடாமல் தடுத்து செரிமானத்தை இலகுவாக்கிறது. நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் மலச்சிக்கலும் வருவது குறையும்.
3. முந்திரி இதய ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கிறது. உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு, சக்தி வாய்ந்த தாவர சேர்மமான பைட்டோஸ்டெரால்களை உடலுக்கு கொடுக்கிறது. பைட்டோஸ்டெரால் பல வழிகளில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதிலும் குறிப்பாக பைட்டோஸ்டெரால்கள் குடலில் கொழுப்பை உறிஞ்சுவதில் தலையிடுவதன் மூலம் எல்டிஎல் ("கெட்ட") கொழுப்பின் அளவை குறைக்கும்.