கிட்னியை சுற்றி பாதுகாப்பு வளையம் போடும் வாழைத்தண்டு- யாரெல்லாம் சுவைக்கலாம்?
பொதுவாக வாழையில் உள்ள இலை முதல் தண்டு வரை அனைத்தும் மனித உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்குகிறது.
இலை, பழம், நார், பூ, தண்டு என அனைத்திலும் உணவுகளை சமைக்கலாம். இது கிட்னியில் கல் பிரச்சினை, மலச்சிக்கல் பிரச்சினை, செரிமான கோளாறுகள், சரும ஆரோக்கியம் உள்ளிட்ட பல நோய்களுக்கு மருந்தாக பார்க்கப்படுகிறது.
அதிலும் குறிப்பாக பலரின் உயிரை காவு வாங்கும் கிட்னி கல் பிரச்சினைகளுக்கு கூட வாழை மரத்திலுள்ள தண்டு பயன்படுத்தப்படுகிறது. கிட்னி கல் பிரச்சினை உள்ளவர்கள் எந்தவித தயக்கமும் இல்லாமல் வாழைத்தண்டு சமைத்து சாப்பிடலாம்.
அதிலுள்ள நார்ச்சத்து, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
அப்படியாயின், ஆபத்தான நோய்களுக்கு கூட மருந்தாக செயற்படும் வாழைத்தண்டை சாப்பிடுவதால் வேறு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
இந்த நோயாளர்கள் சாப்பிடாதீர்கள்!
1. மற்ற காய்கறிகளை விட வாழைத்தண்டில் அதிகமான நார்ச்சத்து உள்ளன. இது வயதானவர்கள் சாப்பிடும் பொழுது அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் உணவுகளில் இதுவும் ஒன்று. மலச்சிக்கல் பிரச்சினையுள்ளவர்கள், எடை குறைப்பு முயற்சியில் இருப்பவர்கள் எந்தவித தயக்கமும் இல்லாமல் வாழைத்தண்டை சமைத்து சாப்பிடலாம்.
2. வாழைப்பழத்தை போன்று வாழைத்தண்டிலும் பொட்டாசியம் சத்து அதிகமாக உள்ளது. இது உடலில் உள்ள நீர்மத்தை சமநிலைப்படுத்தி ரத்த அழுத்தத்தை கட்டுபாட்டில் வைக்கிறது.
3. டையூரிக் பண்புகள் அதிகமாக வைத்திருக்கும் வாழைத்தண்டை அடிக்கடி சாப்பிடும் ஒருவருக்கு சிறுநீரக கோளாறுகள் வராது. வாரத்திற்கு 2-3 முறையாவது தடவைகள் உணவுடன் சேர்த்துக் கொள்ளலாம்.
4. சிறுநீரக கற்கள் பிரச்சனையுள்ளவர்கள் வாழைத்தண்டை சமைத்து மட்டுமல்ல பானமாகவும் செய்து குடிக்கலாம். சிலர் சூப் ஆகவும், சட்னியாகவும் சமைத்து சாப்பிடுகிறார்கள். சிறியவர்கள் வீட்டில் இருந்தால் அவர்களுக்கு அடிக்கடி செய்துக் கொடுக்கலாம்.
5. சிலர் காலையில் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு ஜூஸ் குடிக்குமாறு அறிவுறுத்துவார்கள். வெறும் வயிற்றில் பானமாக குடிப்பதை தவிர்க்க வேண்டும். அத்துடன் ஆரம்பக்கட்ட சிறுநீரக கோளாறு உள்ளவர்கள் மருத்துவரின் பரிந்துரை அல்லாமல் இதனை எடுத்துக் கொள்ளக் கூடாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |