நீங்கள் தினமும் வாழைப்பழம் சாப்பிடும் நபரா? கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள்
நம்முடைய உணவு பழக்க வழக்கங்களில் ஒரு சிலர் தினமும் வாழைப்பழம் எடுத்துக் கொள்வது உண்டு. அந்த வகையில், தொடர்ந்து ஒருவர் 45 நாட்களுக்கு வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.
பொதுவாக, வாழைப்பழம் என்பது பசியை போக்குவதற்காக நிறைய நபர்கள் சாப்பிடும் ஒரு உணவாகவே உள்ளது. காலை நேரங்களில் உணவு எடுத்துக் கொள்ள நேரமில்லாத காரணத்தினால் வாழைப்பழம் சாப்பிட்டு அவர்கள் வயிற்றை நிரப்பி கொண்டு போவதை நாம் பார்க்க முடிகிறது. அது மட்டுமில்லாமல் வாழைப்பழம் வருடத்தில் எல்லா நாட்களும் கிடைக்கக்கூடிய பழமாகவும் உள்ளது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை வேண்டாம் என்று சொல்வதில்லை. அது மட்டும் இல்லாமல் வாழைப்பழத்தில் உடலுக்கு தேவையான எல்லா ஊட்டச்சத்துகளும் கிடைக்கிறது. அந்த வகையில், ஒருவர் 45 நாட்கள் தொடர்ந்து வாழைப்பழம் சாப்பிட்டு வருகின்ற பொழுது அவர்களுக்கு உடலில் நிறைய மாற்றங்கள் நடக்கிறது.
அந்த வகையில், United States Department of Agriculture (USDA)கூற்றின்படி 100 கிராம் பழுத்த வாழைப்பழத்தில் 89 கலோரிகள், 0.33 கிராம் கொழுப்பு, 1 மில்லிகிராம் சோடியம், 22.80 கிராம் கார்போஹைட்ரேட், 2.60 நார்ச்சத்து, 1.09 கிராம் புரதம், 358 மில்லி கிராம் பொட்டாசியம் ஆகியவை இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதற்கு உதவுகிறது. மேலும், இயற்கை சர்க்கரை கார்போஹைட்ரேட்டும் உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குவதாக சொல்லப்படுகிறது.

அதனால் காலை உணவாகவும் உடற்பயிற்சிக்கு பின்னர் அல்லது முன்னதாக சிற்றுண்டி ஆக சாப்பிடுவது சிறந்த உணவாக கருதப்படுகிறது. குறிப்பாக, செரோடோனின் என சொல்லப்படும் ஹார்மோன் சுரப்பை இது தூண்டி,நம்முடைய மனநிலையை இது சீராக வைக்கிறது.
தொடர்ந்து ஒருவர் 45 நாட்கள் வாழைப்பழத்தை சாப்பிட்டு வரும் பொழுது அவர்களுக்கு அதன் ஊட்டச்சத்துக்கள் சீரான ரத்த அழுத்தத்திற்கும் மேம்பட்ட செரிமானத்திற்கும் ஆரோக்கியத்திற்கு நல்ல சத்துக்கள் கொடுக்கிறது.
இருப்பினும் அதிக கலோரி உள்ளவர்கள் வாழைப்பழத்தை சாப்பிடும் போதும் கூடுதல் கலோரியை உடலில் எடுத்துக் கொள்ளும் என்பதால் எடை அதிகரிக்கலாம்.