நெல்லிக்காயுடன் கறிவேப்பிலையை ஒன்னா சாப்பிடுங்க... உடலில் இந்த மாற்றங்கள் உறுதி!
பொதுவாகவே நெல்லிக்காய் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றில் ஏராளமான ஊட்டச்சத்துக்களும், ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்திருப்பது அனைவரும் அறிந்த விடயம் தான்.
ஆனால் நெல்லிக்காய் மற்றும் கறிவேப்பிலையை இணைப்பதன் ஆரோக்கிய நன்மைகளை குறித்து பலரும் அறிந்திருப்பதற்காக வாய்ப்புகள் குறைவு.இது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆரோக்கிய நன்மைகள்
நெல்லிக்காய் மற்றும் கறிவேப்பிலை இரண்டும் மிகவும் ஆரோக்கியமானவை மற்றும் உங்கள் உடலை குணப்படுத்தும், ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்தவை. இந்த கலவை உண்மையில் மந்திரம் செய்யும் என்றால் மிகையாகாது.
இதுக்குறித்து குளோபல் பப்ளிக் ஹெல்த் நியூட்ரிஷன் யுகே & தேசிய நீரிழிவு கல்வியாளரும் ஊட்டச்சத்து நிபுணருமான தீப்சிகா ஜெயின் அவர்கள் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவர் அடிக்கடி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஆரோக்கியத்திற்கு நன்மைகளை வழங்கக்கூடிய உணவுகள் மற்றும் உணவுச் சேர்க்கைகள் குறித்து பகிர்ந்துக்கொள்வது வழக்கம்.
அந்தவகையில் அண்மையில் நெல்லிக்காயுடன் கறிவேப்பிலை சேர்த்து சாப்பிடும் போது கிடைக்கும் அற்புத 3 நன்மைகள் குறித்து இவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் குறிப்பிடுகையில், "நெல்லிக்காயுடன் கறிவேப்பிலையை சேர்த்து எடுக்கும் போது, அது தலைமுடியின் ஆரோக்கியத்தை மேற்படுத்துவதில் அதிக ஆற்றல் காட்டுகின்றது. காரணம் நெல்லிக்காயில் வைட்டமின் சி செரிந்து காணப்படுவதுடன், கறிவேப்பிலையில் பீட்டா கரோட்டீன் அதிகளவில் காணப்படுகின்றது. இந்த இரண்டு பொருட்களின் கலவையானது தலைமுடியை வலுப்படுத்த துணைப்புரிவதுடன், கூந்தல் வளர்ச்சியை துரிதப்படுத்துவதில் ஆற்றல் காட்டுகின்றது.
நெல்லிக்காயுடன் கறிவேப்பிலை சேர்த்து சாப்பிடும் போது, அது சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செய்ல்படுகின்றது. இது இரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பதில் பெரிதும் துணைப்புரியும் ஏனெனில் இவை இரண்டிலும் நார்ச்சத்து செரிந்து காணப்படுவதால், இது இரத்த சர்க்கரை அளவை எளிதில் அதிகரிக்க விடாமல் தடுக்கும். இந்த இரண்டின் கலவை நீரிலிவு நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே கூறவேண்டும்.
மேலும் நெல்லிக்காய் மற்றும் கறிவேப்பிலை இரண்டிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருப்பதால், அவற்றை இணைத்து சாப்பிடும் போது , அவை உடலினுள் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுவதிலும் சரும பொலிவை அதிகரிப்பதிலும் ஆற்றல் காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |