தினமும் ஒரு டம்ளர் மாதுளம் ஜூஸ் குடிச்சா இவ்வளவு நன்மைகளா? குழந்தைகள் உள்ளவர்கள் தெரிஞ்சிக்கோங்க!
பொதுவாக குழந்தைகள் உள்ள வீடுகளில் மற்ற நேரங்களில் உள்ள உணவுகளை விட காலையுணவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.
அந்த வகையில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல்வேறு உணவுகளில் ஒன்று தான் மாதுளம் பழம்.
இன்றைய அவசர உலகில் காலையுணவு அமர்ந்து பொறுமையாக சாப்பிடுவதற்கு நேரம் கிடைப்பதில்லை. அதனால் சிலர் திரவ உணவுகளை காலையில் எழுத்து கொள்கிறார்கள்.
இதன்படி, காலையில் கஞ்சி வகைகள், மோர், ஜீஸ் உள்ளிட்ட திரவ உணவுகளை எடுத்து கொள்ளலாம்.
காலையில் உடல் வேலை செய்வதற்கான அத்தனை சத்துக்களையும் மாதுளம் பழம் ஜீஸ் கொடுக்கின்றது.
அத்துடன் மாதுளம் பழத்தில் ஆன்டி.ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக இருப்பதால், இது ப்ரீ ராடிக்கல்களால் ஏற்படும் சேதத்தைக் குறைக்கிறது.
வேறு என்னென்ன மருத்துவ குணங்கள் மாதுளம் பழத்தில் இருக்கின்றது என தொடர்ந்து பார்க்கலாம்.
காலையில் இனி மாதுளம் பழ ஜீஸ் குடிக்கலாமா?
1. மாதுளம் பழ ஜூஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகளவு இருக்கும். இது ப்ரீ ராடிக்கல்களால் செல்களில் ஏற்படும் பாதிப்புக்களை குறைத்து புற்றுநோய் வர விடாமல் தடுகின்றது. தினமும் காலையில் குடிப்பது நல்லது.
2. பொதுவாக 40 வயது தாண்டி பெண்களுக்கு எலும்புகள் தொடர்பான பிரச்சினைகள் அதிகமாக இருக்கும். இதனை மாதுளம் பழம் சரிச் செய்கின்றது. ஏனெனின் மாதுளம் பழத்தில் ப்ளேவோனாய்டுகள் உள்ளன.
3. காலையில் எழுந்தவுடன் இரத்தயோட்டத்தை அதிகரிக்கும் உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். அந்த வரிசையில் முதல் இருப்பது தான் மாதுளம் பழம். இது இரத்தயோட்டத்தை அதிகரித்து இதய நோய் வராமல் தடுக்கின்றது.
4. தினமும் மாதுளம் பழ ஜூஸை குடித்து வந்தால் உடலுக்குள் செல்லும் ஜுஸ் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து கட்டுப்பாட்டில் வைத்து கொள்கின்றது.
5. மற்ற பழங்களை விட மாதுளம் பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் சி அதிகமாக உள்ளன. இது பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் மற்றும் ஈஸ்ட் தொற்றுகளை எதிர்த்துப் போராடாடுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |