சுடுநீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா? இப்படி ட்ரை பண்ணுங்க
நாம் தண்ணீர் குடிப்பது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதுவும் குளிந்த நீரை விட சுடுநீரைக் குடிப்பது ஏறாளமா நன்மைகளை பெற்றுத்தரக்கூடியது.
குளிர் காலமானாலும் சரி, கோடை காலமானாலும் சரி, தினமும் காலை எழுந்து ஒரு டம்ளர் சுடுநீரைக் குடிப்பது அளப்பரிய நன்மை பயக்கும். காலையில் எழுந்தவுடன் சுடுநீர் குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வெந்நீர் குடிப்பதால்...
தினமும் அதிகளவு வெந்நீர் குடிப்பதால் இரத்த குழாய்கள் விரிவடையும், இதனால் இரத்த ஓட்டம் சீராக செயல்படுகிறது. மேலும் செல்களுக்கு ஊட்டச்சத்து, ஆக்ஸிஜன் ஆகியவை சரியாக கிடைக்கும்.
இதனால் உடல் புத்துணர்ச்சியுடன் செயற்படுகின்றது. உடல் எடையை குறைக்க வேண்டும் என முயற்சிப்பவர்கள் காயைில் சுடுநீருடன் தேன் மற்றும் எலுமிச்சை கலந்து குடித்தால் உடல் எடை கணிசமாக குறைவடையும்.
தினமும் வெந்நீர் குடிப்பதினால் நரம்பு மண்டலம் சீரக செயற்பட துணைப்புரிகின்றது. குறிப்பாக நம் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுவதால் உடல் என்றும் இளமை தோற்றத்துடன் இருப்பதற்கு வெந்நீர் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.
மாதவிடாய் காலங்களில் வயிறுவலி அதிகமாக இருக்கும்போது, வெறும் வயிற்றில் வெந்நீருடன் சிறிதளவு வெந்தயம் சேர்த்து பருகினால் 10 நிமிடத்தில் வலி காணாமல் போய் விடும். முகப்பருக்களும் வெந்நீர் பருகுவதால் சுத்தமாக அகன்றுவிடும்.
காலை வெறும் வயிற்றில் வெந்நீரோடு இஞ்சி அல்லது துளசியை கலந்து உண்டால், செரிமான பிரச்சினைகளுக்கு மிகச்சிறந்த தீர்வாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |