நீரிழிவு நோயாளிகள் இலவங்கப்பட்டை நீர் குடித்தால் உடலுக்கு என்ன நன்மை?
காலையில் இலவங்கப்பட்டை தேநீர் அருந்துவது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. அவை என்னவென்பது பற்றி பதிவில் பார்க்கலாம்.

இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டை சமையலுக்கு பயன்படுத்தப்படும் ஒரு மசாலாப்பொருளாகும். இது உணவின் சுவையை மேம்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும்.
இது உணவிற்கு மட்டுமல்ல உடலின் ஆரோக்கிய நன்மைகளுக்கும் நன்மை தரும்.

ஆயுர்வேத இலக்கியங்களில் இலவங்கப்பட்டை பற்றி பல நன்மைகள் கறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உடலில் பல நோய்களுக்கு இது மருந்தாக பயன்படுகிறது.
அதிலும் நீரிழிவு நோயாளிகளுக்கு இலவங்கப்பட்டை ஒரு சக்திவாய்ந்த மூலிகையாக இருக்கிறது. காலையில் வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டை தேநீர் அருந்துவது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்.
இந்த நிலையில் காலையில் வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டை நீர் குடித்தால் என்ன நன்மை என்பதை பார்க்கலாம்.

நன்மைகள்
சளி மற்றும் இருமல் - இலவங்கப்பட்டையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளன. இவை, நோய்த்தொற்றுகள், சளி மற்றும் காய்ச்சலை எதிர்த்துப் போராட உதவும்.
செரிமானத்தை மேம்படுத்துகிறது - வாயுத்தொல்லை, அஜீரணம் அல்லது வயிறு உப்புசத்தால் அசௌகரியமாக உணர்ந்தால் இலவங்கப்பட்டை தேநீர் உங்கள் வயிற்றுக்கு ஒரு சிறந்த மருந்து. இது சீரான செரிமான அமைப்பைப் பராமரிக்க உதவும்.

அழற்சியைக் குறைத்தல் - நாள்பட்ட நோய்கள் பெரும்பாலும் உடலுக்குள் ஏற்படும் அழற்சியால் ஏற்படுகின்றன. இலவங்கப்பட்டையில் உள்ள சேர்மங்கள் இந்த அழற்சியைக் குறைக்க உதவக்கூடும்.
நீரிழிவு எதிர்ப்புப் பண்புகள் - இலவங்கப்பட்டை தேநீர் இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. வகை 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிகவும் நன்மை தரும். எனவே, நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாகத் உணவில் இலவங்கப்பட்டை தேநீரைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
காலையில் வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டை தேநீர் அருந்துவது மிகவும் நன்மை தரும் என்று கருதப்படுகிறது. இதனை உறங்குவதற்கு முன்பும் குடித்தால் இது நன்மை தரும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |