கோடை காலத்தில் தினமும் மோர் குடிக்கிறீங்களா? இந்த பதிவு உங்களுக்குத் தான்
தினமும் மோர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மோர்
கோடைக்காலத்தில் நீர்ச்சத்து இழப்பு அதிகமாக இருக்கும் என்பதால் உடலை நீரோட்டாக வைத்துக்கொள்ள மோர், இளநீர், தண்ணீர் சத்து நிறைந்த பழங்களை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இளநீர், பழ ஜுஸ் இவற்றின் விலை சற்று அதிகமாக இருக்கும் நிலையில், மோர் எளிதாக வீட்டில் குறைந்த செலவில் தயார் செய்துவிட முடியும். அந்த வகையில் மோர் தினமும் குடிக்கலாமா என்ற கேள்வி நம்மில் பலருக்கும் எழுந்திருக்கும்.
இந்த பதிவில் தினமும் மோர் பருகினால் என்னென்ன நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை தெரிந்து கொள்வோம்.

நன்மைகள் என்னென்ன?
புளித்த மோர் குடிப்பதால் குடலில் நல்ல பாக்டீரியாக்கள் வளர உதவுவதுடன், குடல் ஆரோக்கியமும் மேம்படுகின்றது. செரிமான பிரச்சனைகளை குறைக்கவும் செய்கின்றது.
மோரில் கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் அதிகம் உள்ளதால் எலும்புகளுக்கு வலுசேர்க்கின்றது.
பால் சார்ந்த பொருட்கள் அனைத்தும் உடலுக்கு ஆரோக்கியம் மட்டுமின்றி அதிலுள்ள அத்தியாவசிய அமினோ அமிலங்கள் தசைகளை பராமரிக்க உதவுகின்றது. மேலும தசைகளை பாதுகாக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.

பால் பொருட்களில் இயற்கையாக எலக்ரோலைட்டுகள், பொட்டாசியம் உள்ள நிலையில் கோடையில் நீர்ச்சத்து இழப்பினை தடுக்கின்றது. உடலில் எப்போதும் நீர்ச்சத்தை தக்க வைக்கின்றது.
இதய ஆரோக்கியத்திற்கு சிறந்ததுடன், ரத்த அழுத்தம் சீராகவும் வைக்கின்றது. நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்பாக வைக்கின்றது.
மோரில் உள்ள பரோபயாடிக் வகைகள் நுண்ணுயிர் எதிர்ப்பிகளால் ஏற்படும் வயிற்றுப்போக்கு அபாயத்தை குறைப்பதுடன், இரைப்பை குடல் தொற்றிலிருந்தும் நம்மை பாதுகாக்கின்றது.
நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை ஆதரிக்கவும், இதிலுள்ள பி12 சத்துக்கள் சைவ பிரியர்களுக்கு சிறந்ததாக இருக்கின்றது.

குறைவான கலோரி உள்ளதால் சர்க்கரை நோயாளிகளுக்கும், உடல் எடையைக் குறைப்பவர்களுக்கும் சிறந்ததாகும்.
மோரில் துருவிய இஞ்சி அல்லது இஞ்சி சாறு இவற்றினை சேர்த்தால் செரிமானம் மேம்படும். பெருங்காயம் சேர்த்தால் வயிறுஉப்புசம் நீங்கும்.
அவ்வாறு இல்லையெனில் வறுத்து அரைத்த சீரக பொடியை சிறிதளவு சேர்த்து பருகலாம். சில துளி எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் தாகத்தை தணிக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |