முகம் கண்ணாடி போல் ஜொலிக்கணுமா? அப்போ டார்க் சாக்லேட் ஃபேஷியல் பண்ணுங்க
பொதுவாகவே அனைவருக்கும் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். குறிப்பாக பெண்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்வதில் அதிக அக்கறை செலுத்துகின்றனர்.
சிலர் இதற்காக அதிகளவில் நேரத்தையும் பணத்தையும் செலவிடுகின்றனர். இருப்பினும் வயது அதிகரிக்கும் போது சருமத்தின் நெகிழ்வுத்தன்மை மற்றும் இறுக்கத்தன்மை குறையும்.
இதற்கு போதிய சத்துக்கள் சரும செல்களுக்கு கிடைக்காமல் இருப்பது தான் காரணம்.
அழகுசாதன பொருட்களினால் ஏற்படும் பக்க விளைவுகளாலும் சருமத்தில் அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றது.
இதனால் இயற்கை முறையில் தயார் செய்யப்பட்ட பேஸ் மாஸ்க் பயன்படுத்துவது மற்றும் Skin Care முறைகளை சரியாக பின்பற்றுவது சருமத்தை பொலிவாக வைத்திருக்க உதவுகிறது.
அந்த வகையில் சருமத்தை இயற்கை முறையில் பொலிவாக்கும் டார்க் சாக்லேட் ஃபேஷியல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சருமத்தை ஈரப்பதமாக்குவதிலும், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய்களை நீக்குவதிலும் டார்க் சாக்லேட் ஃபேஷியல் முக்கிய பங்கு வகிக்கின்றது.
இது சருமத்தில் உள்ள சோர்வையும், ஹைப்பர் பிக்மென்டேஷனையும் நீக்க பெரிதும் துணைப்புரிகின்றது.
டார்க் சாக்லேட் ஃபேஷியல்
முதலில் ஒரு கிண்ணத்தில் உருக்கிய டார்க் சாக்லேட்டை ஒரு மேசைக்கரண்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் ஒரு தேக்கரண்டி பன்னீர் மற்றும் தேனையும் சேர்த்து நன்றாக பேஸ்ட் செய்துக்கொள்ள வேண்டும்.
முகத்தை நன்றாக சுத்தம் செய்த பின்னர் இந்த போஸ்டை முகத்தில் தடவி 15 தொடக்கம் 20 நிமிடங்கள் வரை காயவிட வேண்டும்.
பின்னர் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் உடனடி பொலிவு பெறுவதை கண்கூடாக அவதானிக்கலாம். அதன் பின்னர் மாய்ஸ்சரைஸர் தடவி கொள்ள வேண்டும்.
சாக்லெட் சருமத்திற்கு மிகவும் நல்லது. இதகை தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது சருமம் என்றும் இளமையாக இருக்கும்.
சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் சாக்லெட் ஃபேஸ் மாஸ்க் போடுவதைத் தவிர்ப்பது நல்லது.
காரணம் இது சருமத்தை வறட்சியடையச் செய்வதோடு, அரிப்பை ஏற்படுத்தவும் வாய்ப்பு கணப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |