ஐந்து வகை நோய்களுக்கு மருந்தாகும் கறிவேப்பிலை!
பொதுவாக வீட்டிலுள்ள கறிவேப்பிலையை வைத்து உடம்பில் ஏற்படும் பல நோய்களை குணமாக்க முடியும்.
கறிவேப்பிலையில் கால்சியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், இரும்பு, பாஸ்பரஸ், விட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருக்கிறது.
இதனால் உடலில் ஏற்படும் முடி உதிர்வு, உலர்வான சர்மம், செரிமாண பிரச்சினைகள் மற்றும் தோல் பளபளப்பு போன்றவவைகளை இது சரிச் செய்கிறது.
அந்தவகையில் கறிவேப்பிலை உடலில் ஏற்படும் நோய்களுக்கு எவ்வாறு குணப்படுத்துகிறது என்பது குறித்து தெளிவாக பார்க்கலாம்.
கறிவேப்பிலை மருத்துவம்
1. கறிவேப்பிலையில் இரும்பு சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் அதிமாக இருப்பதால், உடலில் ஏற்படும் ரத்த சோகையை கட்டுபடுத்துகிறது.
இதனால் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
2. சர்க்கரை நோய் எனப்படும் டயாபடிஸ் உள்ளவர்களுக்கு உணவில் கறிவேப்பிலை சேர்த்துக் கொள்வது நல்லது.
ஏனெனின் இது சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவுகிறது.
3. கொலஸ்ரோல் பிரச்சினை பாதிக்கப்பட்டவர்கள் கறிவேப்பிலை ஜீஸ், கறிவேப்பிலை சம்பள் ஆகியவற்றை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு செய்வதால் ஜீரண சக்தியை மேம்படுத்தப்பட்டு கொலஸ்ரோல் வர விட விடாமல் தடுக்கிறது.
4. பெண்களுக்கு தலைமுடி தொடர்பான பிரச்சினைகள் அதிகம் இருக்கும் அதனை சரிச் செய்வதற்கு கறிவேப்பிலை உதவுகிறது.
கறிவேப்பிலையால் செய்யப்பட்ட எண்ணெய்களை எடுத்துக் கொள்வதால் இதனை சரிச் செய்து நீண்ட முடியை வளர வைக்கலாம்.
5. இதய நோய் உள்ளவர்களுக்கு கறிவேப்பிலை சிறந்த மருந்து என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
காரணம் கறிவேப்பிலையிலுள்ள ஊட்டச்சத்துக்கள் இதய நோய்க்கு மருந்தாக செயற்படுகிறது.