தலைமுடி கொட்டி கொட்டி சொட்டையாகி விட்டதா? கவலை வேண்டாம்
தற்போது இருக்கும் காலநிலை மற்றும் வேலைப்பளு காரணமாக எம்முடைய தலைமுடியை பராமரிப்பு என்பது குறைந்துக் கொண்டே வருகிறது.
இதனால் பெண்களுக்கு தலைமுடி உதிர்வு, பொடுகு பிரச்சினை, தலைமுடி வெடிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் அதிகமாக இருக்கிறது.
இது போன்ற பிரச்சினைகள் ஏற்படும் போது ஷாம்புவை மாற்றுவார்கள் அல்லது மருத்துவ உதவிகளை நாடுவார்கள். ஆனால் இவை பெரிய மாற்றத்தை கொண்டுவராது.
வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு செய்யப்படும் மருத்துவ எண்ணெய்கள் மற்றும் ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்கள் முறையாக எடுத்துக் கொண்டால் தலைமுடி சம்பந்தமான பிரச்சினைகளை சரிச் செய்ய முடியும்.
பொதுவாக வீடுகளில் தலைமுடி பிரச்சினை ஏற்பட்டால் கறிவேப்பிலையில் செய்யப்படும் எண்ணெய்கள் மற்றும் உணவுகளை அதிகம் கொடுப்பார்கள்.
ஏனென்றால் தலைமுடி ஆரோக்கியத்தை தூண்டக்கூடிய சக்தி கறிவேப்பிலை இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவத்துள்ளது.
அந்த வகையில் கறிவேப்பிலையின் மருத்துவ குணங்களையும், அதன் பயன்களையும் கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.