Beauty: வறண்டு போன தலைமுடிக்கு உடனடியாக நிவாரணம் தரும் தயிர் ஹேர் பேக்
கோடைக்காலம் ஆரம்பித்து விட்டது என்பதால் தலைமுடி தொடர்பான பிரச்சினைகள் அதிகமாக ஆரம்பிக்கும்.
குளிர்காலத்தில் தயிரைத் தவிர்த்தவர்களும் இந்தக் கோடையில் தயிரை வாங்கி சாப்பிடுவார்கள்.
கடும் வெளியிலுக்கு இதமளிக்கும் தயிரை தினமும் சாப்பிட்டு வந்தால் வயிறு இதமாக இருக்கும். வயிற்றுக்கு மட்டுமல்லாமல் தலைமுடிக்கும் இதமளிப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
அந்த வகையில், தலைமுடிக்கு தயிரை பயன்படுத்தும் பொழுது பல்வேறு நன்மைகள் ஏற்படும். இது தொடர்பாக தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- தயிர்- 3 டேபிள் ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன்
- கற்றாழை ஜெல்- 4 டேபிள் ஸ்பூன்
பேக் தயாரிக்கும் முறை
தயிர், தேங்காய் எண்ணெய், கற்றாழை ஜெல் ஆகிய மூன்றையும் நன்றாக கலந்து குளிப்பதற்கு முன்னர் தலை முதல் நுனி முடி வரை தடவ வேண்டும்.
தலையில் தடவி, அரை மணி நேரம் கழித்து குளித்தால் வழக்கத்திற்கு மாறாக முடி பஞ்சு மாதிரி மென்மையாக இருக்கும்.
2. தேவையான பொருட்கள்
- தயிர் - அரை கப்
- பாதாம் எண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன்
- முட்டை- 2 பேக்
தயாரிக்கும் முறை
தயிர், பாதாம் எண்ணெய், முட்டை ஆகிய மூன்றையும் ஒரு பவுலில் போட்டு, நன்றாக கலந்து விடலும்.
இந்த பேக்கை குளிப்பதற்கு முன்னர் தலையில் பூசி, அரை மணி நேரம் கழித்துக் குளித்தால் முடி பொலிவாக இருக்கும்.
பலன்கள்
1. தலைமுடிக்கு இதமளிக்கும் தயிரை தலையில் பூசி ஒரு மணி நேரம் ஊறவைத்துக் குளித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
2. கோடைக்காலத்தில் தலைக்கு படும் வெப்பம் காரணமாக தலைமுடி வெடித்து போனது போன்று இருக்கும். அப்படியான நேரங்களில் தயிரை தலைக்கு பூசி குளிக்கலாம். இப்படி செய்து வந்தால் தலைமுடி பளபளப்பாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |