நீரிழிவு நோயை துரத்தி அடிக்க வேண்டுமா? இந்தவொரு தண்ணீர் போதும்
பொதுவாக நீரிழிவு நோயாளர்களின் இரத்தத்திலிருக்கும் சக்கரையின் அளவை கட்டுபடுத்துவதற்கு கிராம்பு நீர் எடுத்துக் கொள்வார்கள்.
கிராம்பில் அதிகமான வைட்டமின் சி, நார்ச்சத்து, மாங்கனீஸ், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் கே ஆகிய ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளது.
இதனால் இது பாக்ரீயாக்களை இல்லாமலாக்கி இரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகிறது. மேலும் பற்களில் ஏற்படும் பிரச்சினைகள், வயிற்றிலிருக்கும் பிரச்சினைகள் ஆகியவற்றை குணப்படுத்த கிராம்பு பயன்படுத்தப்படுகிறது.
மேலும் நீரழிவு நோயாளர்களின் இரத்திலிருக்கும் சக்கரையின் அளவு அதிகரிக்கும் போது கிராம்பை பயன்படுத்தி செய்யப்படும் தண்ணீர் கொடுக்கலாம்.
இவை சக்கரையின் அளவை கட்டுபடுத்தி இதனால் ஏற்படும் விளைவை குறைக்கிறது. அந்த வகையில் கிராம்பு தண்ணீர் எவ்வாறு தயாரிப்பது, இதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
நீரிழிவு நோயாளர்கள் உணவுகளை முறையாக எடுத்துக் கொள்ளா விட்டால் சக்கரையின் அளவு குறைந்து மயக்கம், தலைசுற்றல் மற்றும் உடல் சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
தேவையான பொருட்கள்
கிராம்பு - 5
தண்ணீர் - 2 கப்
தயாரிப்புமுறை
தூகக்கத்திற்கு செல்லும் போது இரண்டு கிராம்புகளை ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊறவைத்து தூங்க வேண்டும்.
அதிலிருக்கும் கிராம்பு நன்றாக தண்ணீரில் ஊறி, பதப்படுத்தப்பட்ட தண்ணீர் தயாராக இருக்கும்.
எடுத்துக்கொள்ளும் முறை
காலையில் எழுந்தவுடன் இந்த கிராம்பு நீரை பருக வேண்டும்.
இவ்வாறு செய்வதால் சக்கரையின் அளவை கட்டுபடுத்த முடியும் வயிற்றிலிருக்கும் தேவையற்ற கிருமிகள் வெளியேறும்.
வாய் துருநாற்றம் இருப்பவர்கள் இதனை பருகினால் விரைவில் குணமாகும்.