பல் வலியால் அவதிப்படுகின்றீர்களா? இந்த எண்ணெய் உடனடி தீர்வு கொடுக்கும்
பொதுவாகவே ஏனைய வலிகளுடன் ஒப்பிடும் போது பல் வலி சற்று பயங்கரமானதாகவும் இலகுவில் தாங்கிக்கொள்ள முடியாததாகவும் காணப்படுகின்றது.
பல் வலியை அனுபவித்தவர்களுக்கு மாத்திரமே இதன் உண்மையான வேதனை என்னவென்று தெரியும்.
பல் வலி வந்துவிட்டால் பெரும்பாலும் கூடவே தலைவலியும் ஆரம்பித்துவிடும். பல்வலியால் துடிக்கும் போது இலகுவில் தீர்வு கொடுக்கக்கூடிய வீட்டு வைத்தியம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
அந்த வகையில் பல்வலிக்கு உடனடி நிவாரணம் கொடுப்பதில் கிராம்பு முக்கிய இடம்வகிக்கின்றது. எனவே, பல் வலிக்கு தீர்வு கொடுக்கும் கிராம்பு எண்ணெயினை வீட்லேயே இயற்கை முறையில் தயாரிக்கலாம்.
கிராம்பு எண்ணெயில் உள்ள யூஜெனோல் என்னும் பொருள் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆற்றுவது மட்டுமின்றி, நோய்த்தொற்றுகள் மற்றும் பாக்டீரியா வளர்ச்சியையும் தடுப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது.
எப்படி தயாரிப்பது?
முதலில் தேவையான அளவுக்கு கிராம்பை எடுத்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை ஒரு கண்ணாடி போத்தலில் போட்டு, கிராம்பு மூழ்கும் அளவுக்கு ஆலிவ் எண்ணெயை ஊற்றிக்கொள்ள வேண்டும்.
பின்னர் போத்தலை இறுக்கமாக மூடி சூரிய ஒளி படாத இடத்தில், ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் வைக்க வேண்டும்.
பின்னர் அதனை வடிகட்டி இன்னொரு போத்தலுக்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.
பல்வலி ஏற்படும் போது கிராம்பு எண்ணெயில் ஒரு சிறிய பருத்தி உருண்டையை நனைத்து, பல் வலி உள்ள இடத்தில் வைத்து வாயை ஓர்இரு நிமிடங்களுக்கு இறுக்கமாக மூடிக்கொள்ள வேண்டும்.
இதை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் வாய் பகுதியில் பாதிப்பு உண்டாகும் அபாயம் ஏற்படகூடும். இதனை பயன்படுத்தும் போது வாய் தசைகளில் படாதவாறு பயன்படுத்துவது முக்கியம்.
இது பல் வலிக்கு தீர்வு கொடுக்கின்ற போதும், தொடர்ச்சியாக வலி இருந்தால் பல் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |