தினமும் வெறும் வயிற்றில் கிராம்பு சாப்பிட்டால் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகள் பற்றி தெரியுமா?
கிராம்பு முக்கிய சமையல் பொருளாக மட்டுமல்ல, ஆயுர்வேதத்தில் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் உணவுக்கு தனி சுவை தருகிறது.
இந்தக் கிராம்பு முடிப்பிரச்சினைகளில் இருந்து செரிமானப் பிரச்சினைகள் வரைக்கும் பல நன்மைகளைக் கொடுக்கிறது. மேலும், கிராம்பில் ஃபிளாவனாய்ட்ஸ், பினாலிக் காம்பவுண்ட்ஸ் மற்றும் வைட்டமின் சி உள்ளிட்ட பல ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்திருக்கின்றது.
இவ்வாறு பல நன்மைகள் கொண்ட கிராம்பை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது தெரியுமா?
வெறும் வயிற்றில் கிராம்பு
காய்ச்சல், ஜலதோஷம், மூச்சுக்குழாய் அழற்சி, சைனஸ், வைரஸ் தொற்று ஆகிய பிரச்சினைகளுக்கு கிராம்பு மிகவும் உதவும்.
கிராம்புகளில் உள்ள ஆன்டி-வைரல் ரத்தத்தை சுத்திகரிக்கும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
மாங்கனீசு மற்றும் ஃபிளாவனாய்டு போன்ற கூறுகளை கிராம்பு கொண்டுள்ளது. இந்த கூறுகள் எலும்பு திசுக்களை சரிசெய்ய உதவுகின்றன, இதனால் மூட்டு வலியைக் குறைக்கிறது. மேலும், கிராம்பு எண்ணெயைப் பயன்படுத்துவது மூட்டு வலியைக் குறைக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் உதவுகிறது.
காலையில் கிராம்மை மென்று சாப்பிடுவது உமிழ்நீர் உற்பத்தியை அதிகரிக்கிறது. செரிமான பிரச்சினையை சரிசெய்து மலச்சிக்கலைக் குறைக்கிறது,
கிராம்பு வலி நிவாரணி பண்புகளை கொண்ட யூஜெனால் ஆகும். கிராம்புகளை வெறும் வயிற்றில் தொடர்ந்து உட்கொள்வது ஒற்றைத் தலைவலி மற்றும் தலைவலியைக் குறைக்க உதவுகிறது.
கிராம்பு செரிமான சாறுகளின் சுரப்பை மேம்படுத்தவும் மற்றும் வீக்கம் பிரச்சினைகளை குறைக்கவும் உதவும்.
வெறும் வயிற்றில் ஒரு சிட்டிகை கிராம்பு பொடியை உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரையைக் குறைக்கிறது.
கிராம்புகளை வெறும் வயிற்றில் மென்று சாப்பிடுவதால் இது உமிழ்நீருடன் கலக்கும்போது, குமட்டல் தொடர்பான அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது.
பல் வலி நிவாரணியாக கிராம்பு காலங்காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வலி-நிவாரண பண்புகளுடன், இது வாய்வழி அழற்சி, பிளேக், ஈறு அழற்சி மற்றும் வாய் துர்நாற்றத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |