தினமும் கற்பூரவள்ளி இலையை மென்று சாப்பிட்டால் என்ன நடக்கும்?
பொதுவாக நமக்கு வரும் அத்தனை நோய்களுக்கும் இயற்கையாக மருந்து இருக்கின்றன.
அந்த வகையில் இயற்கையாக கிடைக்கும் துளசி, கற்பூரவள்ளி போன்றவை பெரும்பாலான இடங்களில் காணப்படும் செடிகளாகும். இதில் நாம் நினைக்கிறதையும் தாண்டி ஏகப்பட்ட மருந்துவ குணங்கள் இருக்கின்றன.
மேற்குறிப்பிட்ட இரண்டு தாவரங்களில் துளசி பற்றி நாம் அறிந்திருப்போம். மாறாக கற்பூரவள்ளி அல்லது ஓமவல்லி இலைகளைப் பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் அதன் நன்மைகள் தெரியாமல் இருப்போம்.
அந்த வகையில் கற்பூரவள்ளி அல்லது ஓமவல்லி இலையில் தினமும் வாயில் போட்டுக் கொண்டால் என்ன பயன் என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
கற்பூரவள்ளி சாப்பிட்டால் என்ன நடக்கும்?
1. கற்பூரவள்ளி இலைகளை தினமும் வாயில் போட்டு மென்று சாப்பிடுவதால் ஆன்டி-மைக்ரோபியல் பண்பு அதிகமாகும். இதனால் வாய் துர்நாற்றம் முற்றாக இல்லாமல் போகும்.
2. கற்பூரவள்ளி இலைகளுக்கு நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, உடலை நோய்கள் மற்றும் நோய்க்கிருமிகளிடம் இருந்து பாதுகாக்கும் ஆற்றல் இருக்கின்றன. இதனால் தாராளமாக காலையில் சாப்பிடலாம்.
3. நார்ச்சத்து அதிகமாக இருக்கும் இலைகளை இதுவும் ஒன்று. டயட்டில் இருப்பவர்கள் காலையில் எழுந்தவுடன் கற்பூரவள்ளி இலைகளை வாயில் போட்டுக் கொண்டால் சீரான செரிமானம் இடம்பெற்று எடை குறையும்.
4. உடலின் மெட்டபாலிசத்தையும் அதிகரிக்கும் ஆற்றல் கற்பூரவள்ளி இலைகளுக்கு உண்டு. இது வயிற்று தசைகளை தளர்த்தி வாய்வு தொல்லை, வயிற்று உப்புசம், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளிலிருந்து எம்மை காக்கின்றது.
5. கற்பூரவள்ளி இலைகளில் வைட்டமின் ஏ, சி, செலினியம், ஜிங்க் போன்றவை அதிகம் உள்ளன. இது சரும அழகை பாதுகாப்பதுடன், ஹார்மோன்களை சீராகவும் வைத்துக் கொள்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |