குளிர்காலத்தில் நீராவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
குளிர்காலம் வந்துவிட்டாலே அனைவருக்கும், ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் போன்றவைகள் ஏற்படும். இதனை தடுக்க பலரும் மருத்துவர்களை நாடுகின்றனர். ஆனால் இயற்கை முறையில் ஆவி பிடிப்பதாலே இதனை தடுக்க முடியுமாம்.
ஆவி பிடிப்பதால் நம்முடைய நுரையீரலில் இருக்கக்கூடிய கிருமிகள் வெளியேறிவிடும். நல்ல சூடான ஆவியை சுவாசிக்க அந்த ஆவி நம்முடைய நாசி வழியாக உள்ளே மெதுவாக சென்று நுரையீரலில் இருக்கக்கூடிய கிருமிகளை அழிக்கும்.
கொதிக்கும் தண்ணீர் உள்ள பாத்திரத்தின் முன்பு தலை குனிந்து உட்கார்ந்து, போர்வையால் மூடிக்கொண்டு, ஆவியை சுவாசித்தால் போதும். கட்டாயம் கண்களை மூடிக்கொள்ள வேண்டும். மஞ்சள், மிளகு, எலுமிச்சை, இஞ்சி, துளசி, கற்பூரவள்ளி இதையெல்லாம் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து ஆவி பிடிக்கலாம்.
ஆவி பிடிக்கும் போது அதிக நேரம் ஆவி பிடிக்க கூடாது. இந்த ஆவி பிடித்தல் வைத்தியம் மூலம் தொற்று நோயிலிருந்து நம்மை பாதுகாக்க முடியும். நுரையீரலுக்கு நீராவி பிடித்தல் நல்ல நிவாரணம் தரும்.
சுத்தமான நீரில் வேப்பிலை, துளசி, நொச்சி இலை போட்டு நன்றாக கொதிக்க வைத்து ஆவி பிடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. சளி, இருமலை விரட்ட, ஆவி பிடித்தால் சுவாசம் தடையின்றி இருக்கும்.
ஆஸ்துமா, சைனஸ் நோயால் துன்பப்படுவோர் இம்முறையை பின்பற்றலாம்.
நீரில் எலுமிச்சை அல்லது மஞ்சள் பொடியை கலந்து ஆவி பிடித்தால் தலை பாரம் நீங்கும். அதிகம் சாப்பிட்டவர்கள், மயக்கம், தலைச்சுற்று உள்ளவர்கள்.