நீரிழிவு நோயாளிகள் மோரை இப்படி குடித்து பாருங்க! சர்க்கரை அளவு கடகடவென குறையுமாம்
கோடை வெயிலுக்கு மிகவும் உகந்த பானமாக இருக்கும் மோர் நீரிழிவு நோயாளிகள் எவ்வாறு பருகலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மோர்
தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் மோர் ஆரோக்கியம் நிறைந்த இயற்கை பானமாக பார்க்கப்படுகின்றது. இவை உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியாக வைப்பதுடன், குடல் ஆரோக்கியத்தையும், செரிமானத்தையும் மேம்படுத்துகின்றது.
குறிப்பாக மோரில் பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து குடிப்பது உண்டு. இவ்வாறு குடிப்பதால் வாயு தொல்லை மற்றும் உடல் வீக்கம் ஆகியவை குறைகின்றது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நீர்ச்சத்தையும் சமநிலைப்படுத்துகின்றது. வயிறு எரிச்சல் நீங்குவதுடன், அமிலத்தன்மை பிரச்சனையையும் குறைக்கின்றது.

மோரில் பெருங்காயம்
பெருங்காயம் சேர்த்து மோர் குடித்தால் வாயு வெளியேறுவதுடன், மலச்சிக்கல், வயிறு வலி போன்ற பிரச்சனையும் குறைகின்றது. ஆதலால் மோர் குடிக்கும் போது சிறிதளது உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து குடிக்கவும்.
கோடை காலத்தில் உடல் சூட்டை குறைப்பதுடன், அதிக வெப்பத்தினால் ஏற்படும் வாய் புண், முகப்பரு, அஜீரணம் போன்ற பிரச்சனைகளை குறைக்கும்.

நீரிழிவு நோயாளிகள் மோரை மண்பானையில் வைத்து குடித்தால் ரத்த சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்குமாம். அதிலும் மதிய உணவிற்கு பின்பு மோர் எடுத்துக் கொள்வது செரிமானத்தை மேம்படுத்துகின்றது.

அதுவே மாலை நேரம் மோர் பருகுவதால் உடல் சூட்டை குறைத்து, வாயு பிரச்சனையிலிருந்து நிவாரணம் அளிக்கின்றது.
இதய நோய் அபாயத்தையும் குறைக்கின்றது. ஏனெனில் மோரில் உள்ள கால்சியம், பொட்டாசியம் ரத்த அழுத்தத்தினை சமநிலைப்படுத்துகின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |